சமீபத்தில் முடிந்த இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் அதிக ரன் அடித்தார் இந்திய அணியின் தொடக்கவீரர் ரோகித் சர்மா.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடிக்க, இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது இந்திய அணி.
இந்திய அணியின் ரோகித் சர்மா மட்டும் இல்லாமல், இந்திய அணி தொடரை வெல்வதற்கு மேலும் ஒரு இரண்டு வீரர்கள் உதவி செய்தார்கள் – குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்த்ர சஹால்.
இந்திய அணியின் இரு சுழற்பந்து வீச்சாளர்களும் எதிரணியின் வீரர்களை திணறடித்தார்கள். இந்த தொடரில் இருவரும் 4 போட்டிகளில் விளையாடி, இருவரும் சேர்த்து 13 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார்கள்.
அந்த தொடருக்கு பிறகு, ரோகித் ஷர்மாவுக்கு புதிய வேலையை கொடுத்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.
தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி அக்டோபர் 7ஆம் தேதி தோனியின் சொந்த ஊரான ரஞ்சி மைதானத்தில் நடக்கவுள்ளது.
இந்த தொடரில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடியதால் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 5வது இடத்திற்கு சென்றார் ரோகித் சர்மா.
டி20 தொடர்களில் இந்திய அணிக்காக ரோகித் ஷர்மாவுடன் தொடக்கவீரராக ஷிகர் தவான் களமிறங்குவார். சொந்த பிரச்சனைக்காக ஒருநாள் தொடர்களில் அவர் பங்கேற்கவில்லை. ஒருநாள் தொடர்களில் தேர்வாகாத தினேஷ் கார்த்திக், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தேர்வாகி உள்ளார்.
அணி தேர்வில் நடந்த ஒரே ஆச்சரியம், ஆஷிஷ் நெஹ்ராவை தேர்வு செய்தது தான். கடைசியாக இந்திய அணிக்காக இந்த வருடத்தின் தொடக்கத்தில் பெங்களூரு மைதானத்தில் விளையாடினார்.