ப்ளே ஆஃப் சுற்றுகளில் மட்டமாக ஆடும் ரோகித் சர்மா!
மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது வரை நான்கு முறை ஐபிஎல் கோப்பை தொடரை வென்று மிகவும் பலசாலியான அணியாக தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி இருக்கிறது. இந்த நான்கு முறையும் ரோகித் சர்மா தான் அந்த அணிக்கு கேப்டனாக இருக்கிறார். ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அவ்வப்போது தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதங்களும், அரை சதங்களும் அடித்துக் கொண்டிருக்கிறார்

ஆனால், இப்படி அருமையாக ஆடும் ரோகித் சர்மா பிளே ஆப் போன்ற பெரிய போட்டிகள் வரும் போது தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் ஆகிய அணிகள் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஆகியோர் களமிறங்கினர். இரண்டாவது ஓவரை டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசினார். இந்த ஓவரில், தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அஸ்வின் கையில் வெளியேறினார். இந்த டவுட் பிளே ஆப் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளில் அவரது மூன்றாவது டக் அவுட் ஆகும்

அதனை தாண்டி பிளே ஆப் மற்றும் நாக்-அவுட் சுற்றில் ரோகித் சர்மா பெரிதாக ஆடியது கிடையாது. இதுவரை 19 ஆட்டங்களில் பிளே ஆப் சுற்றுப் போட்டிகளில் ஆடி 229 ரன்கள் அடித்து இருக்கிறார் இதன் சராசரி 12.7 இரண்டும் ஒரே ஒரு முறை மட்டுமே 30 ரன்களை கடந்து இருக்கிறார். ரோஹித் சர்மா பொதுவாக ரோகித் சர்மா இதுபோன்ற முக்கியமான போட்டிகளில் ஆடுவது கிடையாது என்ற விமர்சனம் இருந்து வந்தது இந்த புள்ளிவிவரங்கள் மீண்டும் அதனை நிரூபிக்கின்றன.