ரோகித் சர்மா நிலைமை கவலைகிடம்?.. அடுத்த டெஸ்ட் போட்டியில் இருப்பாரா? – திடுக்கிடும் தகவலை பகிர்ந்த கேஎல் ராகுல்!

ரோகித் சர்மாவின் காயம் பற்றி சமீபத்தில் பேசியிருக்கிறார் கேஎல் ராகுல்.

பங்களாதேஷ் அணியுடன் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, பந்தை பிடிக்கும் முயற்சித்து கட்டைவிரலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக ரோகித் சர்மா அவதிப்பட்டு வந்தார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் உடல்நிலை கருதி அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

டெஸ்ட் போட்டிகள் துவங்குவதற்குள் திரும்பி விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் அவர் ஆடமாட்டார் என்று பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது. அபிமன்யு ஈஸ்வரன் மாற்று வீரராக இந்திய அணிக்குள் வந்திருக்கிறார்.

ரோகித் சர்மா இல்லாத நேரத்தில், துணைக் கேப்டன் கேஎல் ராகுல் அந்த கேப்டன் பொறுப்பை ஏற்று இந்திய அணியை வழிநடத்துகிறார். முதல் டெஸ்டுக்கு முன் நிருபர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறியிருக்கிறார் கேஎல் ராகுல். அதில் ரோகித் சர்மாவின் உடல்நிலை குறித்தும் கூறியிருக்கிறார். கேஎல் ராகுல் பதில் கூறியதாவது:

“ரோகித் சர்மா போன்ற மிக முக்கியமான வீரரை இந்திய அணி மிஸ் செய்கிறது. விரைவில் காயத்திலிருந்து குணமடைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். முதல் டெஸ்ட் போட்டியில் நிச்சயம் அணிக்கு திரும்பி விடுவார் என நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. இன்னும் சில நாட்கள் ஓய்வு எடுப்பது மிகவும் நல்லது. நிச்சயம் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குள் அணிக்கு திரும்பி விடுவார். அணி நிர்வாகமும் அதைத்தான் எதிர்பார்க்கிறது. நல்ல உடல் நிலையுடன் அவர் திரும்ப வேண்டும். தற்போது உடல்நலம் தேறியியுள்ளார் என ரிப்போர்ட் பார்த்தேன்.” என்றார்.

மேலும் விராத் கோலி பற்றி பேசிய கேஎல் ராகுல் கூறுகையில், “சரியான நேரத்தில் பார்மிற்கு திரும்பி இருக்கிறார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தது மிகுந்த நம்பிக்கையை கொடுத்திருக்கும். அந்த பார்மை டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்வார் என்று எதிர்பார்க்கிறேன். இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். இங்கிலாந்து அணியை போல ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.