அடேங்கப்பா... ரோஹித் சர்மா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? 18 வீரர்களின் ஒரு வருட சம்பளத்தை விட அதிகம் !! 1

அடேங்கப்பா… ரோஹித் சர்மா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? 18 வீரர்களின் ஒரு வருட சம்பளத்தை விட அதிகம்

ஐ.பி.எல் டி.20 தொடரில் மும்பை அணியின் கேப்டனான ரோஹித் சர்மா வாங்கும் சம்பளம் குறித்தான தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மா, சமகால கிரிக்கெட் உலகின் தலை சிறந்த வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.

இந்திய அணியில் மட்டுமில்லாமல் ஐ.பி.எல் தொடரிலும் மாஸ் காட்டி வரும் ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியையும் கெத்தாக வழிநடத்தி வருகிறார்.

அடேங்கப்பா... ரோஹித் சர்மா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? 18 வீரர்களின் ஒரு வருட சம்பளத்தை விட அதிகம் !! 2

இந்தநிலையில், ரோஹித் சர்மா மும்பை அணியில் வாங்கும் சம்பளம் பாகிஸ்தான் அணிக்காக விளையாடும் ஒட்டுமொத்த வீரர்களை விட இரு மடங்கு அதிகம் என்று தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் தனது வீரர்களுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலை வெளியிடும். கடந்த மே மாதம் 2020-21 -ம் ஆண்டுக்கான ஏ, பி, சி. வளர்ந்து வரும் வீரர்கள் என நான்கு பிரிவுகளாக வீரர்களை பிரித்து பட்டியலை வெளியிட்டது.

‘ஏ’ பிரிவில் மூன்று வீரர்களும், ‘பி’ பிரிவில் 9 வீரர்களும், ‘சி’ பிரிவில் ஆறு வீரர்களும், வளர்ந்து வரும் வீரர்கள் பட்டியலில் மூன்று வீரர்களும் இடம் பிடித்தனர்.

அடேங்கப்பா... ரோஹித் சர்மா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? 18 வீரர்களின் ஒரு வருட சம்பளத்தை விட அதிகம் !! 3

‘ஏ’ பிரிவில் ஒரு வீரருக்கு தலா இந்திய பண மதிப்பில் 60,92,050 ரூபாய் சம்பளமான நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘பி’ பிரிவில் உள்ள வீரர்களுக்கு 41,54,193 ரூபாய் சம்பளமும், ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ளவர்களுக்கு 30,36,398 ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

18 வீரர்களின் ஒரு வருடத்திற்கான ஒட்டுமொத்த சம்பளம் 7.4 கோடி ரூபாய் ஆகும். ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வருடத்திற்கு 15 கோடி ரூபாய் வாங்குகிறார்.

பாகிஸ்தான் அணியின் ஒட்டுமொத்த ஒப்பந்த வீரர்கள் வாங்கும் சம்பளத்தை விட ரோஹித் சர்மா இரண்டு மடங்கு சம்பளம் வாங்குகிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *