கோஹ்லி, தொனி இல்லை; இவர் தான் எனது ரோல் மாடல்; இளம் வீரர் ஓபன் டாக் !! 1

கோஹ்லி, தொனி இல்லை; இவர் தான் எனது ரோல் மாடல்; இளம் வீரர் ஓபன் டாக்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய 19 வயதேயான ஹைதர் அலி, ரோகித் சர்மாதான் முன்மாதிரி என்று தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இளையோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்திருந்தவர் ஹைதர் அலி. இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20-யில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 9 போட்டிகளில் 239 ரன்கள் விளாசினார்.

கோஹ்லி, தொனி இல்லை; இவர் தான் எனது ரோல் மாடல்; இளம் வீரர் ஓபன் டாக் !! 2

இளம் வீரரான ஹைதர் அலி பாபர் அசாம் அல்லது விராட் கோலி போன்று வளர வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் ரோகித் சர்மாதான் எனக்கு முன்மாதிரி என்று ஹைதர் அலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹைதர் அலி கூறுகையில் ‘‘என்னுடைய முன்மாதிரி ரோகித் சர்மா. அவரைப் பற்றிய சிறந்த விஷயம், அவருடைய ஸ்டிரைக் ரேட்தான். என்னுடைய ஆட்டத்திலும் அப்படி இருக்க விரும்புகிறேன்’’ என்றார்.

ஏற்கனவே, நான் விராட் கோலியை போன்று விளையாட விரும்பவில்லை. பாபர் அசாம் போன்று விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *