இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டி 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.
கட்டாக்கில் நடந்த முதல் ஆட்டத்தில் 93 ரன் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 2-வது போட்டியில் 88 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது. இன்று நடைபெறும் ஆட்டத்திலும் தனது அதிரடியை வெளிப்படுத்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று ‘ஒயிட்வாஷ்’ செய்யும் ஆர்வத்தில் உள்ளது.
Photo by Deepak Malik / BCCI / Sportzpics
இதற்கு முன்பு டி20 தொடரில் எதிரணியை ஒரே முறை தான் இந்திய அணி வைட்வாஷ் செய்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சென்ற டோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை புரட்டிப்போட்டு டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை வைட்வாஷ் செய்தது.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் நடைபெறும் மூன்றாவது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால், தோனியின் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்வார்.
விராட் கோலி இல்லாத காரணத்தினால் அணியை வழிநடத்தி வரும் ரோகித் சர்மா முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியிடம் சரண் அடைந்தார். அதன் பிறகு இரட்டை சதம், டி20 தொடரில் சதம் என இலங்கை அணியை புரட்டி போட்டார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.
Photo by Deepak Malik / BCCI / Sportzpics
இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி தென்னாப்ரிக்காவுக்கு செல்கிறது. அதற்கான இந்திய அணியில் விராட் கோலி மீண்டும் கேப்டன் பதவிக்கு வந்ததால், இலங்கை அணியுடன் விளையாடும் கடைசி தொடர் தான் ரோஹித் ஷர்மாவுக்கு கேப்டனாக கடைசி போட்டி. அதன் பிறகு மீண்டும் அவர் எப்போது கேப்டனாக களமிறங்குவார் என்று தெரியாது. இதனால், இலங்கைக்கு எதிரான மூன்றது டி20 போட்டியில் வெற்றி பெற்று இலங்கை அணியை வைட்வாஷ் செய்வார் என்று எதிர்பார்க்க படுகிறது.