மலிங்காவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ; மும்பை கேப்டனின் இன்ஸ்டா பதிவு ! 1

மலிங்காவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ; கேப்டனின் இன்ஸ்டா பதிவு ! 

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 122 ஐபிஎல் போட்டிகளில் பங்குபெற்று 170 விக்கெட்டுகளை வீழ்த்திய லசித் மலிங்கா சில தினங்களுக்கு முன் தனது  ஓய்வை அறிவித்து இருக்கிறார். 

2008ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் தற்போது வரை 13 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதில் மும்பை அணி 5 முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் கோப்பையை வென்றுள்ளது.

மலிங்காவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ; மும்பை கேப்டனின் இன்ஸ்டா பதிவு ! 2

இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் வருகின்ற மே மாதம் நடைபெற இருப்பதால் 8 அணிகளும் தற்போது தங்களது அணையிலிருந்து வெளியேற்றப்படும் வீரர்களையும் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்களையும் அறிவித்து இருக்கிறது. இதையடுத்து வருகின்ற பிப்ரவரி 18ஆம் தேதி ஐபிஎல் ஏலம் நடைபெறுகிறது. இதற்காக 8 அணிகளும் தங்கள் அணிக்கு எந்த வீரர்களை தேர்வு செய்யலாம் என்று ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

 இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க காலத்திலிருந்து விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தற்போது ஐபிஎல் மற்றும் உரிமையாளர்கள் கிரிக்கெட் போட்டியில் இருந்து முற்றிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். 

மலிங்காவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ; மும்பை கேப்டனின் இன்ஸ்டா பதிவு ! 3

இது அவரது ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.  இதுகுறித்து மலிங்காவின் ஓய்வு குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மற்றும் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி விளக்கம் அளித்திருந்தனர்.  இதையடுத்து பும்ரா “நீங்கள் இல்லாத ஐபிஎல் தொடர் எப்போதும் போல் இருக்காது” என்று வருத்தமாக கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மலிங்காவின் ஓய்வு குறித்தும் பிரிவு குறித்தும் இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

மலிங்காவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது ; மும்பை கேப்டனின் இன்ஸ்டா பதிவு ! 4

ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “லசித் மலிங்காவை நாங்கள் மிஸ் பண்ணுவோம். இவர் ஒரு மேட்ச் வின்னர். இவரால் நாங்கள் பல போட்டிகளில் வெற்றி கண்டுள்ளோம். இவரது பிரிவை எங்கள் அணியில் இருக்கும் அனைவரும் உணர்வோம்” என்று பதிவு செய்திருக்கிறார் ரோஹித் சர்மா. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *