தோனி இல்லை; நான் கேப்டன் வித்தையை கத்துகிட்டதே இவர் கிட்ட தான்; ரோஹித் சர்மா ஓபன் டாக்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து கேப்டன்சி குறித்து பல விசயங்களை தான் கற்று கொண்டதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோஹ்லி கேப்டனாக இருந்தாலும், பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் ரோஹித் சர்மாவே மிகச்சிறந்த கேப்டன் என்றே கூறுவர். அந்த அளவிற்கு ஐபிஎல் தொடரில் தோனிக்கு அடுத்தபடியாக வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்து வரும் ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இதுவரை நான்கு முறை சாம்பியன் கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார்.

தோனி இல்லை; நான் கேப்டன் வித்தையை கத்துகிட்டதே இவர் கிட்ட தான்; ரோஹித் சர்மா ஓபன் டாக் !! 2

ஐபிஎல் தொடரின் அசைக்க முடியாத கேப்டனாக வலம் வரும் ரோஹித் சர்மா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கிடம் இருந்து தான் தானே கேப்டன்சி குறித்து பல விசயங்களை கற்று கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரோஹித் சர்மா கூறுகையில், “ என்னுடைய ஆட்டம் முக்கியமானதாக இருந்தாலும், ஒரு கேப்டனாக மற்ற அனைத்து வீரர்களிடமிருந்துமே ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பை பெறவேண்டும். என்னுடன்(கேப்டன்) சேர்த்து மொத்தம் 11 வீரர்கள் மட்டுமே களத்தில் இறங்கி விளையாடுவோம். மற்ற வீரர்கள் பென்ச்சில் தான் இருப்பார்கள். ஆனால் ஒவ்வொரு வீரரும் அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களிடம் எடுத்துரைத்து, அவர்களையும் முக்கியமானவர்களாக நினைக்கவைக்க வேண்டும் என்பதை பாண்டிங்கிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன்.

தோனி இல்லை; நான் கேப்டன் வித்தையை கத்துகிட்டதே இவர் கிட்ட தான்; ரோஹித் சர்மா ஓபன் டாக் !! 3

அணி வீரர்களிடம், இதை செய் அதை செய் என்று ஒரு கேப்டனாக சொல்வதை விட, அவர்களின் கருத்தை கேட்டு, அதிலிருந்து சரியான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த திட்டங்களை செயல்படுத்த சொல்ல வேண்டும் என்று என்னிடம் சொன்னார் பாண்டிங். ஒரு கேப்டன் எதையும் வீரர்கள் மீது திணிக்காமல், அவர்களின் கருத்தை கேட்டு அதிலிருந்து சரியானதை எடுத்து செயல்படுத்த வைக்க வேண்டும் என்ற விஷயத்தை பாண்டிங்கிடமிருந்து கற்றுக்கொண்டேன் என்றார் ரோஹித் சர்மா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *