இருந்தாலும் கொஞ்சம் சேட்ட அதிகம் தான்; ஐ.சி.சி.,யை கிண்டலடித்துள்ளார் ரோஹித் சர்மா
‘புல் ஷாட்’ அடிப்பதில் யார் வல்லவர் என்று நான்கு பேர் படத்தை வெளியிட்டு கேள்விகேட்டிருந்த ஐசிசி-யை இந்திய அணி தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா கிண்டல் செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா – தென்ஆப்பிரிக்கா, இலங்கை – இங்கிலாந்து இடையிலான போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15-ந்தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் கிரிக்கெட் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை.
இதனால் கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் போன்றோர் தங்களது கடந்த கால சிறந்த தருணங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) தன்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சர்ட்ஸ், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிப்ஸ், இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆகியோரின் படத்தை பதவிட்டு ‘புல் ஷாட்’ அடிப்பதில் இந்த நான்கு சிறந்த பேட்ஸ்மேகளில் உங்களுக்கு பிடித்தவர் யார்? என ரசிகர்களிடம் கேள்வி கேட்டிருந்தது.
Which batsman, past or present, has the best pull shot, in your opinion? ? pic.twitter.com/TAXf8rr3el
— ICC (@ICC) March 22, 2020
இதற்கு பதில் அளித்த இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மா யாரோ ஒருவடையது இங்கு மிஸ்சிங்? என்று ட்ரோல் செய்துள்ளார்.
ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இங்கே யாரோ ஒருவரைடையது மிஸ்சிங்?. வீட்டில் இருந்து வேலை செய்வது மிகவும் எளிதல்ல என்று நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Someone’s missing here ?? Not easy to work from home I guess https://t.co/sbonEva7AM
— Rohit Sharma (@ImRo45) March 22, 2020
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் விளாசியுள்ள ரோகித் சர்மாவும் ‘புல் ஷாட்’அடிப்பதில் வல்லவர். பெரும்பாலான சிக்சர்களை அவர் புல் ஷாட் முறையில் விளாசியிருப்பார். இதனை மனதில் வைத்துதான் ஐசிசியை ட்ரோல் செய்துள்ளார்.