இவர் எனக்கு சச்சினை போன்றவர்.. கே எல் ராகுல் பாராட்டியது விராட் கோலி இல்லை; இவரைத்தான்! 1
HAMILTON, NEW ZEALAND - JANUARY 29: Rohit Sharma of India (L) celebrates hitting the winning 6 on the last ball of the super over with KL Rahul during game three of the Twenty20 series between New Zealand and India at Seddon Park on January 29, 2020 in Hamilton, New Zealand. (Photo by Phil Walter/Getty Images)

இவர் எனக்கு சச்சினை போன்றவர்.. கே எல் ராகுல் பாராட்டியது விராட் கோலி இல்லை; இவரைத்தான்!

இந்திய அணியில் இவர் எனக்கு சச்சினை போன்றவர் என துவக்க வீரர் பாராட்டி புகழாரம் சூட்டியுள்ளார் கே எல் ராகுல்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இன்றியமையாத வீரராக உருவெடுத்தவர் துவக்க வீரர் ரோகித் சர்மா. ஒருநாள் அரங்கில் மும்முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் ஆவார். மேலும், ஒருநாள் அரங்கில் ஒரே போட்டியிவ் 250 ரன்களுக்கும் மேல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையும் இவரையே சேரும். அதேப் போட்டியில் ரோகித் சர்மா 264 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் தனிநபர் அடித்த அதிகபட்ச ரன் இதுவாகும்.

Rohitஇவர் எனக்கு சச்சினை போன்றவர்.. கே எல் ராகுல் பாராட்டியது விராட் கோலி இல்லை; இவரைத்தான்! 2

டி20 போட்டிகளிலும் இவர் எளிதில் விட்டுவிடவில்லை. டி20 அரங்கிலும் 4 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார் ரோகித் சர்மா.

இந்நிலையில், ரோகித் சர்மாவின் ஆட்டதைகண்டு வியப்படைவதாகவும், சச்சினுக்கு அடுத்தபடியாக அவரை பார்ப்பதாகவும் கூறிய கேஎல் ராகுல், தன்னை ரோகித் சர்மாவின் மிகப்பெரிய ரசிகன் எனவும் குறிப்பிட்டு பேசினார்.இவர் எனக்கு சச்சினை போன்றவர்.. கே எல் ராகுல் பாராட்டியது விராட் கோலி இல்லை; இவரைத்தான்! 3

இதற்கு முன்னதாக, டி20 போட்டிகளில் தவானை விட ராகுலுடன் துவங்குவதையே தான் முதன்மையாக வைத்திருந்ததாகவும், பிறகு அணி நிர்வாகம் தவானுடன் நன்றாக ஒருநாள் போட்டிகளில் ஆடுவதால் டி20 போட்டிகளிலும் அதையே தொடரலாம் என கூறியதால் தவான் துவங்கினார் என ரோகித் பகிர்ந்தார்.

இதுகுறித்து கே எல் ராகுல் கூறுகையில், “ரோகித் சர்மா டி20 போட்டிகளில் நான் துவங்கியதை விரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரின் ஆட்டம் பலருக்கும் வாயடைக்க செய்யும். சச்சினுக்கு பிறகு ஒருவரின் ஆட்டம் இவ்வாறு செய்கிறது என்றால் அது ரோகித் சர்மாவின் ஆட்டம் மட்டுமே. அவருடன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆடி வருகிறேன். இன்றளவும் என்னை வியக்க வைக்கிறது. மைதானத்தில், வெளியிலும் அவர் அப்படிதான்.” என்றார் கே எல் ராகுல்.

இவர் எனக்கு சச்சினை போன்றவர்.. கே எல் ராகுல் பாராட்டியது விராட் கோலி இல்லை; இவரைத்தான்! 4
BIRMINGHAM, ENGLAND – JULY 02: Rohit Sharma of India and KL Rahul of India score more runs during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Bangladesh and India at Edgbaston on July 02, 2019 in Birmingham, England. (Photo by Clive Mason/Getty Images)

உலகக்கோப்பை தொடரில் இந்த ஜோடியின் ஆட்டம் சிறப்பாக அமைந்ததை பலராலும் பார்க்க முடிந்தது. தவான் இல்லாத நேரங்களில் மட்டுமே ராகுல் துவக்க வீரசராக ஆடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *