ரோஹித் சர்மாவ நினைச்சா பாவமா இருக்கு ; ரோஹித் சர்மா குறித்து முக்கிய தகவலை தெரிவித்த முன்னாள் வீரர்..
ரோஹித் சர்மாவின் பார்ம் மற்றும் லெவல் கொஞ்சம் குறைந்துவிட்டது என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா, இந்திய அணிக்காக இருதரப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்டாலும், நடந்து முடிந்த 2022 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கோப்பை வென்று கொடுக்க தவறிவிட்டதால் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் மோசமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
தோனி மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் அதிக வாய்ப்புகள் கொடுத்ததால்தான் அவர்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது எனவும், ரோஹித் சர்மாவை ஒரே ஒரு உலகக்கோப்பை தொடரை வைத்து மதிப்பிட வேண்டாம் என பெரும்பாலானவர்கள் தெரிவித்து வந்தாலும், ரோஹித் சர்மாவின் பார்ம் மற்றும் அடிக்கடி ஏற்படும் காயம் என அவருடைய நிலைமை தற்போது பரிதாபமாக உள்ளது.
மேலும் அடுத்தடுத்து தொடர்களில் இந்திய அணி அவரை நீக்கி வருவதால் இந்திய அணியில் ரோஹித் சர்மாவின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது என்பது அப்பட்டமாக தெரியத் துவக்கியுள்ளது.
இந்தநிலையில்,ரோஹித் சர்மாவின் நிலை மோசமாகத்தான் உள்ளது என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில்,இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், ரோஹித் சர்மாவின் நிலை குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
இதுகுறித்த இர்பான் பதான் பேசுகையில்,“ரோகித் சர்மாவின் பார்ம் மற்றும் லெவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகம் இல்லை,அவர் 2019 உலகக் கோப்பை தொடரில் 5 சதம் அடித்து அதை நிரூபித்துள்ளார். அவருடைய பேட்டிங் மிக சிறப்பாக இருந்தது.தற்போது அவர் தன்னுடைய இழந்த பார்மை மீட்டெடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.அவர் மட்டும் பார்முக்கு வந்துவிட்டால்,இந்திய அணி 2023 50-ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகிவிடும். ரோஹித் சர்மா தயாராகிவிட்டல் இந்திய அணி இன்னும் பலமாகிவிடும்.குறிப்பாக இந்தியாவில் உலகக் கோப்பை நடைபெறுவதால் ரோஹித் சர்மா நிச்சயம் தேவை”.
ஆனால் அதற்கு ரோஹித் சர்மா புத்துணர்வுடன் மீண்டு வரவேண்டும், மேலும் தன்னுடைய உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ரோஹித் சர்மா ஏற்கனவே சிறந்த வீரர் தான்,அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்,கேப்டனாக ரோஹித் சர்மா சிறந்தவர்தான், அணியை வழிநடத்துவதில் அவரிடம் எந்த குறையும் இல்லை,ஆனால் அவர் தன்னுடைய பார்ம் மற்றும் பிட்னஸ் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்” என இர்பான் பதான் அறிவுறை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.