இருப்பதை விட்டுட்டு பறக்க ஆசைப்படுகிறார் ரோகித் - சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடல்! 1

வித்தியாசமான ஷார்ட்களை விளையாடுகிறேன் என்கிற பெயரில் எளிதாக விக்கெட்டை இழந்து வெளியேறுகிறார் ரோகித் சர்மா என்று சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டி20 உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் 16ஆம் தேதி துவங்க உள்ளதால் அதற்குள் பயிற்சியாக இந்த தொடர் இருக்கும் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முதல் டி20 போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இருப்பதை விட்டுட்டு பறக்க ஆசைப்படுகிறார் ரோகித் - சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடல்! 2

இந்தியாவில் குறிப்பாக அதிக ஸ்கோர் அடிக்கக்கூடிய மைதானங்களில் கேப்டன் ரோகித் சர்மா மிகச்சிறப்பாக விளையாடுவார். மற்ற வீரர்கள் விக்கெட் இழந்தாலும் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்கும் அளவிற்கு ரோகித் சர்மாவின் ஆட்டம் இருக்கும். ஆனால் இந்திய அணி 208 ரன்கள் அடித்த போதும், ரோகித் சர்மா வெறும் 11(9) ரன்களில் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். ஆசிய கோப்பை தொடரிலும் இவரது ஆட்டம் கேள்விக்கு உள்ளாக்கக்கூடியதாக இருந்தது. டி20 உலக கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில், இப்படி பார்மை இழந்து நிற்பது இந்திய அணிக்கு ஆரோக்கியமானதா? என விமர்சிக்க துவங்கிவிட்டனர்.

ரோகித் சர்மா இப்படி சொதப்பலாக விளையாடி ஆட்டம் இழந்து வருவதை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் சுனில் கவாஸ்கர். அவர் கூறுகையில், “ரோகித் சர்மா தன்னிடம் நிறைய சாட் வைத்திருக்கிறார். புதிதாக முயற்சி செய்ய வேண்டும் என்கிற தேவையே இல்லை. தன்னிடம் இருப்பதை வைத்து அவர் மிகச் சிறப்பாக விளையாடலாம். இதற்கு முன்னர் டி20 போட்டிகளில் அசாத்தியமாக விளையாடியுள்ளார். நிதானமாகவும் சரியான நேரத்தில் தனது அதிரடியையும் வெளிப்படுத்தி அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய கூடிய வீரர்களில் இவரும் ஒருவர்.

இருப்பதை விட்டுட்டு பறக்க ஆசைப்படுகிறார் ரோகித் - சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடல்! 3

சமீப காலமாக நான் இவரை கவனித்து வருகிறேன். அவர் எந்தவித முயற்சிகளையும் எடுக்காமல் புதிதாக ஷாட் விளையாட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் இதை முயற்சிக்கும் பொழுது அவுட் ஆகி விடுகிறார். டெஸ்ட் போட்டிகள் மற்றும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இருக்கும் பந்துகளுக்கு சிறிய வித்தியாசம் இருக்கிறது. லிமிடெட் ஓவர் போட்டியில் பயன்படுத்தப்படும் வெள்ளை பந்து சிவப்பு பந்தை விட சிறிது உள்ளே வெளியே நகரக் கூடியது. அப்போது நடு மட்டையில் அடிப்பதற்கும் மட்டையின் ஓரமாக படுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் ஏற்படும். ரோகித் சர்மா தனது அவசரத்தினால் இப்படி ஆட்டம் இழக்கிறார் என்று நான் கருதுகிறேன். விரைவில் இதனை புரிந்து கொண்டு தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிப்பதற்கு ஈடுபடுவார் என்று நம்புகிறேன். ஏனெனில் ரோகித் சர்மா தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கினால் இந்திய அணியின் ஸ்கோரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.” என்றார்.

Leave a comment

Your email address will not be published.