இவரை கண்டால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நடுங்குகிறார்கள் – சீக்ரெட்டை புட்டுவைத்த நியூசிலாந்து வீரர்!

இந்த இந்திய வேகப்பந்துவீச்சாளரை எதிர்கொள்ள நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சற்று திணறுகிறார்கள் என ஓப்பனாக கூறியுள்ளார் நியூசிலாந்து அணியின் மூத்த வீரர் ராஸ் டைலர்.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 5-0 என வென்றது. ஒருநாள் தொடரை 0-3 என இழந்தது. அதன்பிறகு, தற்போது டெஸ்ட் தொடருக்காக பயிற்சி செய்து வருகிறது. 21ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், 29ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற இருக்கிறது.

இவரை கண்டால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நடுங்குகிறார்கள் - சீக்ரெட்டை புட்டுவைத்த நியூசிலாந்து வீரர்! 1

இந்திய அணி தற்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக, இதுவரை ஆடிய 7 டெஸ்ட் போட்டிகளில் அனைத்தையும் வென்று 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில கம்பீரமாக நீடிக்கிறது. இரண்டாவதாக, 10 போட்டிகளில் 7 வெற்றி மற்றும் ஒரு ட்ரா என 296 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

இந்திய அணியின் இத்தகைய ஆதிக்கத்திற்கு முக்கிய காரணமாக விளங்குவது அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாகும். இஷாந்த் சர்மா, சமி, உமேஷ் யாதவ், பும்ராஹ் ஆகிய நால்வரும் எதிரணிக்கு அச்சுறுத்தலாகவே திகழ்கின்றனர்.

இவரை கண்டால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நடுங்குகிறார்கள் - சீக்ரெட்டை புட்டுவைத்த நியூசிலாந்து வீரர்! 2

லிமிடெட் ஓவர்களில் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருந்து வரும் பும்ராஹ், ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் போனது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவை தந்திருக்கிறது. ஆனாலும், அவர் ரன்களை வாரி வழங்காமல் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்.

தற்போது டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து ராஸ் டெய்லர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,

இவரை கண்டால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நடுங்குகிறார்கள் - சீக்ரெட்டை புட்டுவைத்த நியூசிலாந்து வீரர்! 3

“பும்ராஹ்வை எதிர்கொள்வது சற்று கடிமான ஒன்று. சுதாரித்து ஆடவேண்டும். இஷாந்த் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஆக்ரோசமானவர். அதேபோல, இந்திய அணியின் பேட்டிங் உலக தரம். இவற்றை சமாளிப்பது எங்களுக்கு எளிதல்ல. ஆனால், நங்கள் எங்களது முழு ஆட்டத்திலும் கவனத்தை செலுத்தினால் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது.” என்றார். • SHARE
 • விவரம் காண

  இரண்டு முக்கிய தலைகள் இல்லாத இந்தியா அணியை டஹெர்வு செய்த ஷேன் வார்னே! கேப்டன் யார் தெரியுமா?

  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே தனக்கு மிகவும் பிடித்தமான இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அந்த அணியில்...

  வீடியோ: தனிமைப்படுத்தலில் இருக்கும்போது குதிரை சவாரி செய்யும் ஜடேஜா!

  இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குதிரை சவாரி செய்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்...

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ !!

  இந்திய வீரர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா..? புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பி.சி.சி.ஐ கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் இருப்பதால் வீரர்களின்...

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் !!

  எனக்கு தொல்லை கொடுத்த ஒரே ஒரு பந்துவீச்சாளர் இவர் தான்; யுவராஜ் சிங் ஓபன் டாக் தான் கிரிக்கெட் விளையாடி காலத்தில் தனக்கு சவாலாக...

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் !!

  எல்லாரும் பணத்துக்காக தான் விளையாடுறாங்க; யுவராஜ் சிங் ஆதங்கம் யுவராஜ் சிங் கிரிக்கெட்டை ஐபிஎல்-க்கு முன் ஐபிஎல்-க்குப் பிறகு என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கிறார்....