முதல் போட்டியிலேயே ஆப்பு கன்ஃபார்ம்; பெங்களூர் அணியின் முழு அட்டவணை உள்ளே
முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள ஆர்சிபி அணிக்கு, இந்த முறை லீக் சுற்றுக்கான போட்டி அட்டவணையிலேயே செம சவால் காத்திருக்கிறது.
ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. ஐபிஎல்லில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத 3 அணிகளில் ஆர்சிபி-யும் ஒன்று.
விராட் கோலி, டிவில்லியர்ஸ் என்ற இருபெரும் தலைசிறந்த வீரர்களை அணியில் பெற்றிருந்தும் அந்த அணியால் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. எனவே இந்த சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள ஆர்சிபி அணி, லோகோவையெல்லாம் மாற்றியுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் 13வது சீசனுக்கான லீக் சுற்றுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆர்சிபி அணி ஆடும் போட்டிகளின் கால அட்டவணை இதோ…
Chinnaswamy, here we come! Block your calendars! #PlayBold #NewDecadeNewRCB pic.twitter.com/nfXvSzQGAb
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 15, 2020
Up & away, we are coming your way! Mark your calendars. #PlayBold #NewDecadeNewRCB pic.twitter.com/72elgDkGUI
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 15, 2020
லீக் சுற்றின் கடைசி 2 போட்டிகளில், ஐபிஎல்லில் கோலோச்சும் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது ஆர்சிபி. இந்த 2 அணிகளையுமே வீழ்த்துவது கடினம். இரண்டுமே சவாலான அணிகள். எனவே கடும் அழுத்தத்துடன் லீக் சுற்றின் கடைசி கட்டத்தில் இந்த அணிகளை எதிர்கொள்வது கடினம்.
அதனால் கடைசி 2 போட்டிகளுக்கு முன்பாக, முதல் 12 போட்டிகளிலேயே ஆர்சிபி அணி முடிந்தவரை பிளே ஆஃபிற்கு தகுதி பெறுவதை உறுதி செய்துவிட வேண்டும். இல்லையெனில் கடைசி 2 போட்டிகளில், 3 முறை சாம்பியன் சிஎஸ்கே மற்றும் 4 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளை எதிர்கொள்வது கடினம். முதல் முறையாக கோப்பையை வெல்ல துடிக்கும் ஆர்சிபிக்கு போட்டி அட்டவணையிலேயே அடிச்சாங்க பாரு ஆப்பு…