2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் இடம்பெற இடம்பெறவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ருத்ர பிரதாப் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜஸ்ப்ரித் பம்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோருடன் உலகக்கோப்பையில் சித்தார்த் கவுல் ஆடவேண்டும். எதிர்வரும் ஒருநாள் உலகக்கோப்பையில் அவர் அபாரமாக ஆடுவார் என நான் உணர்கிறேன். ஐ.சி.சி.யின் மெகா நிகழ்வான உலகக்கோப்பை மே 30 முதல் ஜூலை 14 வரை இங்கிலாந்தில் நடைபெறும்.
சர்வதேச அளவில் கவுல் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் பெரிதாக விளையாடியதில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம். 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல், 28 வயதான ஹைதராபாத் பந்துவீச்சாளர் கவுல் மூன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் பல சர்வதேச 20 போட்டிகளிலும் இடம்பெற்றார்.
டி20 அரங்கில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார், ஆனால் ஒருநாள் போட்டிகளில் 6.62 என்ற எக்கனாமியில் 179 ரன்களை 162 பந்துகளில் கொடுத்துள்ளார். சித்தார்த் கணிசமாக 130 கிலோமீட்டர் வேகத்தில் வீசிவருகிறார். ஐபில் போட்டிகளில் சன் ரைசஸ் அணிக்காக சிறப்பாக பந்துவீசியே இந்திய அணியில் இடம்பிடித்தார்.
2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த 33 வயதான ஆர்.பி. சிங், ஷிகார் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் இடத்தில ராகுல் மூன்றாவது துவக்க வீரராக இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
மோசமான ஆட்டத்தில் இருந்து மீண்டு வந்து கலக்கிய ராகுல்..
இங்கிலாந்தில் சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியபின் மீண்டு வந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை ஆடினார். ஆதலால் அவர் மூன்றாவது துவக்க வீரராகஇருப்பர் . மேலும் ராயுடு தற்போது அற்புதமாக ஆடி வருவது இந்திய அணிக்கு கூடுதல் அளிக்கிறது. சுழற்பந்துவீச்சில் சஹால் மற்றும் குலதீப் இருந்தாலும், மூன்றாவது ஒருவராக ஜடேஜா பலம் சேர்ப்பது சிறப்பு.
2019 உலகக் கோப்பையில் ஆர்.பி.சிங்கின் 15-ஆவது அணி:
விராத் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகார் தவான், ராயுடு, டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக பாண்டியா, கேதார் ஜாதவ் / ரிஷப் பந்த், லோகேஷ் ராகுல், புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், Yuzvendra சாஹல், முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா, ரவீந்திர ஜடேஜா மற்றும் சித்தார்த் கவுல்.