அடுத்த வருட ஐபிஎல் தொடரில் புதிதாக சேர்க்கப்படவுள்ள இரண்டு அணிகளுக்கான ஏலத்தின் முடிவு வெளியாகியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபிஎல் டி.20 தொடரில் இதுவரை 14 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. 15வது சீசனான அடுத்த வருட தொடருக்கு முன்னதாக புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்படும் என பிசிசிசி., கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
இரண்டு புதிய அணிகளை எடுக்க தங்களுக்கு உரிமையாக்கி கொள்ளும் நோக்கில் அதானி குழுமம், ஆர்.பி சஞ்சீவ் கோயங்கா குழுமம், ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியா, மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் அரபிந்தோ பார்மா மாதிரியான நிறுவனங்கள் கடுமையாக போராடியாக போராடியதாக செய்திகள் வெளியாகின. இதில் பிரபல கால்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகம் லக்னோ அணியை ஏலத்தில் எடுக்கும் என பெரும்பாலான செய்திகள் தெரிவித்தன.
இந்தநிலையில், இன்று நடைபெற்ற ஏலத்தின் முடிவில் RPSG க்ரூப் (ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்ற பெயரில் விளையாடிய அணியின் உரிமையாளர்கள்) லக்னோ அணியை 7090 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
அதே போல் மற்றொரு அணியான லக்னோ அணியை CVC Capital குழுமம் 5166 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
Ahmedabad and Lucknow to be the two new teams at Indian Premier League (IPL). CVC Capital Partners gets Ahmedabad while RPSG Group gets Lucknow. pic.twitter.com/0zmQS7nQEb
— ANI (@ANI) October 25, 2021
இதன் மூலம் இப்போதுள்ள டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என இப்போதுள்ள 8 அணிகளையும் சேர்த்து மொத்தம் 10 அணிகள் அடுத்த தொடரில் விளையாடும்.