இந்த பையன மட்டும் விட்றாதீங்க... ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 1

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த இளம் வீரரை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.

கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 190 ரன் என்ற இமாலய இலக்கை இளம் அதிரடி வீரர் தேஜஸ்வி ஜெய்ஸ்வாலின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேஸ் செய்து வெற்றி பெற்றது.

இந்த பையன மட்டும் விட்றாதீங்க... ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 2

20 வயதே ஆன இந்த இளம் வீரர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முக்கியமான போட்டியாக கருதப்பட்ட பஞ்சாப் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் ஒற்றை ஆளாக நின்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார் அதற்கு முந்தைய போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத ஜெய்ஸ்வால், மீண்டும் கம்பேக் கொடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

இதன் காரணமாக ஜெய்ஸ்வாலிர்க்கு அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் ஆலோசகருமான சஞ்சே மன்ஜரேகர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு போதும் இளம் வீரர் ஜெய்ஸ்வாலை விட்டுவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இந்த பையன மட்டும் விட்றாதீங்க... ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !! 3

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, நான் அவரை முழுமையாக நம்புகிறேன் ஏனென்றால் அவர் தன்னுடைய பார்மை மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளார், இதனால் இவருக்கு அதிகப்படியான வாய்ப்புகள் வழங்க வேண்டும். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர துவக்க வீரர் படிக்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்துவது சற்று வருத்தத்தை அளிக்கிறது, இளம் வீரர் இப்படி மோசமான பார்மால் அவதிப்படுவதை நினைத்து நான் அக்கறை படுகிறேன்” என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Leave a comment

Your email address will not be published.