கேஜிஎப் அதிரடியை ராஜஸ்தான் சமாளிக்குமா? ஜெய்ஸ்வால் ஃபார்மை ஆர்சிபி அடக்குமா? வாழ்வா சாவா போட்டியில் ஆர்சிபி பேட்டிங்... பிளேயிங் லெவனில் இரு அணிகளிலும் முக்கிய மாற்றம்! - விவரங்கள் உள்ளே! 1

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இரு அணிகளின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? என்பதை கீழே காணலாம்.

சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டு பிளசிஸ், ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் இறங்கும் என்று அறிவித்தார்.

கேஜிஎப் அதிரடியை ராஜஸ்தான் சமாளிக்குமா? ஜெய்ஸ்வால் ஃபார்மை ஆர்சிபி அடக்குமா? வாழ்வா சாவா போட்டியில் ஆர்சிபி பேட்டிங்... பிளேயிங் லெவனில் இரு அணிகளிலும் முக்கிய மாற்றம்! - விவரங்கள் உள்ளே! 2

புள்ளிப்பட்டியல் அலசல்!

ஆர்சிபி அணி 11 போட்டிகளில் 10 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் கட்டாயம் வெல்லவேண்டிய நிலையில் உள்ளது. தோல்வியை தழுவினால் பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு 10 சதவீதத்திற்கும் குறைவாக மாறிவிடும்.

12 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அடுத்து வரவிருக்கும் இரண்டு போட்டிகளையும் வென்றாக வேண்டும் என்ற நிலையில் இருக்கிறது. இன்று ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியை தழுவினால் ராஜஸ்தான் அணியும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை மிக மிக குறைத்துக் கொள்ளும்.

கேஜிஎப் அதிரடியை ராஜஸ்தான் சமாளிக்குமா? ஜெய்ஸ்வால் ஃபார்மை ஆர்சிபி அடக்குமா? வாழ்வா சாவா போட்டியில் ஆர்சிபி பேட்டிங்... பிளேயிங் லெவனில் இரு அணிகளிலும் முக்கிய மாற்றம்! - விவரங்கள் உள்ளே! 3

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்றைய போட்டியில் ஒரு மாற்றத்துடன் களமிறங்குகிறது. சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா பிளேயிங் லெவனுக்குள் வந்திருக்கிறார். ஆர்சிபி அணி இரண்டு மாற்றங்களுடன் களம் இறங்குகிறது. வெயின் பர்னல் மற்றும் பிரேஸ்வெல் இருவரும் உள்ளே வந்திருக்கின்றனர். ஹேசல்வுட் மற்றும் ஹசரங்கா வெளியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியலை பின்வருமாறு காணலாம்.

ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்):

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கேப்டன்), ஜோ ரூட், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்.

கேஜிஎப் அதிரடியை ராஜஸ்தான் சமாளிக்குமா? ஜெய்ஸ்வால் ஃபார்மை ஆர்சிபி அடக்குமா? வாழ்வா சாவா போட்டியில் ஆர்சிபி பேட்டிங்... பிளேயிங் லெவனில் இரு அணிகளிலும் முக்கிய மாற்றம்! - விவரங்கள் உள்ளே! 4

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (பிளேயிங் லெவன்):

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், வெய்ன் பார்னெல், கர்ன் சர்மா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

கேஜிஎப் அதிரடியை ராஜஸ்தான் சமாளிக்குமா? ஜெய்ஸ்வால் ஃபார்மை ஆர்சிபி அடக்குமா? வாழ்வா சாவா போட்டியில் ஆர்சிபி பேட்டிங்... பிளேயிங் லெவனில் இரு அணிகளிலும் முக்கிய மாற்றம்! - விவரங்கள் உள்ளே! 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *