ராஜஸ்தான் vs ஹைதராபாத்: வெல்லப்போவது யார்?? 1

2019 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் 45வது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இப்போட்டியில் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணியும் ஏழாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியை வெல்லும் அணிக்கு கிடைக்கும் இரண்டு புள்ளிகள் நிச்சயம் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். கிட்டத்தட்ட முதல் மூன்று இடங்கள் ஓரளவிற்கு உறுதியாகிவிட்ட நிலையில், நான்காவது இடத்திற்கு ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான், பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன.

இதில் ஹைதராபாத் அணி 10 புள்ளிகளுடனும் மீதமிருக்கும் நான்கு அணிகள் எட்டு புள்ளிகளுடனும் இருக்கின்றன. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி நல்ல ரன் விகிதத்தில் வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும். ராஜஸ்தான் அணி தோல்வியைத் தழுவினால் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் vs ஹைதராபாத்: வெல்லப்போவது யார்?? 2

ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் உலக கோப்பைக்கு முன்னதாக நடக்கும் தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்து சென்று விட்டனர். இது அந்த அணிக்கு பெரும் அடியாக அமையும்.

ஹைதராபாத் அணியில் நம்பிக்கை தரும் துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ உலகக்கோப்பை முன்னதாக தொடரில் ஆடுவதற்கு இங்கிலாந்து சென்று விட்டார்.

சாத்தியமான வீரர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் – ரஹானே, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஆஷ்டன் டர்னர், ரியான் பராக், லியாம் லிவிங்ஸ்டன், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன், இஸ் சோதி, ஜெய்தேவ் உனட்கட்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – டேவிட் வார்னர், கேன் வில்லியம், மனிஷ் பாண்டே, விஜய் ஷங்கர், ஷகிப் அல் ஹசன், தீபக் ஹூடா, யூசுப் பதான், ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது. 

ராஜஸ்தான் vs ஹைதராபாத்: வெல்லப்போவது யார்?? 3

சிறப்பாக ஆடக்கூடிய வீரர்கள்

ரஹானே, ஸ்ரேயாஸ் கோபால் – ராஜஸ்தான் ராயல்ஸ் | வார்னர், கலீல் அஹமது – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஒளிபரப்பு விவரங்கள்

டிவி  – ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தேர்ந்தெடு HD

லைவ் ஸ்ட்ரீமிங்  – ஹாட் ஸ்டார்

போட்டி நேரம்  – 20:00 IST

இந்த போட்டியில் டாஸ் வென்று இரண்டாவதாக களமிறங்கும் அணி வெற்றி பெறும் என கணிக்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *