டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தீர்மானித்திருக்கிறது! அணி விவரம் உள்ளே! 1

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தீர்மானித்திருக்கிறது அணி விவரம் உள்ளே

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் துவங்கிய தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது தற்போது வரை அனைத்து போட்டியிலும் விறுவிறுப்பாக சென்றிருக்கும் வேளையில் இரண்டு முறை சூப்பர் ஓவர் போட்டிகள் நடைபெற்று ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது

இந்நிலையில் இந்த தொடரின் பதினோராவது போட்டியாக ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. துபாய் மைதானத்தில் நடைபெறுவதால் பந்துவீச்சாளர்களே இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று தெரிகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்த வருடத்தில் ஹைதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது இந்த நடைபெறப்போகும் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்பது கேள்விக்குறிதான்IPL 2020: KKR vs RR: Kolkata Knight Riders face stern Rajasthan Royals test  in Dubai - Yahoo! Cricket.

இரண்டு அணிகளுமே சரிசமம் வாய்ந்த பலம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையப் போகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை இரண்டுமே கிட்டத்தட்ட சரிக்கு சமமாக இருக்கிறது. ராஜஸ்தான் அணிகள் ஜோஸ் பட்டிலர், ஸ்டீவன் ஸ்மித், சஞ்சு சாம்சன் ஆகிய பேட்ஸ்மேன்கள் ஆகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் அதே நேரத்தில் கொல்கத்தா அணியை எடுத்துக்கொண்டால் சுப்மன் கில் இயான் மார்கன் பேட் கம்மின்ஸ் போன்ற வீரர்கள் நன்றாக விளையாடி வருகின்றனர்.

 

அணி விவரம்

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஸ்டீவன் ஸ்மித் (கே), ஜோஸ் பட்லர் (கீ), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ராகுல் தவாட்டியா, டாம் குர்ரான், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், அங்கித் ராஜ்பூட், ஜெய்தேவ் உனட்கட்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சுப்மான் கில், சுனில் நரைன், நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (கே & கீ), ஈயோன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், சிவம் மாவி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, கமலேஷ் நாகர்கோட்டி

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *