ரோகித் சர்மா கிட்ட இருக்க பெரிய பிரச்சினையே இதான், அதனால தான் சதம் அடிக்க முடியல – முன்னாள் வீரர் பேச்சு!

ரோகித் சர்மா கிட்ட இருந்து பெரிதளவில் ரன்கள் வராததற்கு முக்கிய காரணமே இதுதான் என கருத்து தெரிவித்துள்ளார் சஞ்சய் மஞ்ரேக்கர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சற்று மோசமான ஃபார்மில் இருப்பதற்காக கடும் விமர்சனங்களை சந்தித்து வரும் ரோகித் சர்மா-விற்கு நடந்து முடிந்த இலங்கை அணியுடனான ஒருநாள் தொடர் நன்றாகவே அமைந்தது. ஆனால் அவருக்கு கிடைத்த துவக்கத்தை சரியாக பயன்படுத்தி, அதை மூன்று இலக்க ரன்களாக மாற்ற முடியவில்லை.

முதல் போட்டியில் 67 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் 42 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்து சென்றார்.

இந்த துவக்கத்தை ரோகித் சர்மா சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. வழக்கமாக நல்ல துவக்கம் கிடைத்தால் அதை மிகப்பெரிய ஸ்கோராக மாற்றுவதற்கு கை தேர்ந்தவர் ரோகித் சர்மா. ஆனால் சமீபகாலமாக அதை அவர் செய்யத் தவறி வருகிறார். இதுதான் அவருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்பதை குறிப்பிட்டு பேசியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர். அவர் பேசியதாவது:

“ரோகித் சர்மா விளையாடுவதை பார்க்கும் பொழுது அவர் ஃபார்மில் இல்லை என்று கூறவே முடியாது. அவரது பேட்டில் இருந்து நன்றாக ரன்கள் வருகிறது. நல்ல பார்மிலும் இருப்பது போல தெரிகிறது. ஆனால் அவருக்கு கிடைத்த துவக்கத்தை மிகப்பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் திணறி வருகிறார். வழக்கமாக நல்ல துவக்கம் கிடைத்தால் 100 ரன்கள் அடிக்காமல், அதை 150, 200 ரன்கள் ஆக மாற்றக்கூடியவர்.

அதேபோல் 10-15 ஓவர்கள் களத்தில் நின்றுவிட்டால், 40 ஓவர்களுக்கும்மேல் நின்று விளையாடக்கூடிய திறமையான வீரர். சமீபகாலமாக நன்றாக துவக்கம் கிடைத்தாலும், பெரிதாக மாற்றமுடியவில்லை என்பதை கவனித்து சரி செய்து கொள்ள வேண்டும். அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். அதுவும் துவக்க வீரராக இருக்கும் ஒருவர் மிகப்பெரிய ஸ்கோர் அடித்தால் அணிக்கு மிகப்பெரிய பலத்தையும் கொடுக்கும், கேப்டனாகவும் அவர் இருப்பதால் மற்ற வீரர்கள் கூடுதல் பொறுப்புடன் விளையாடுவர்.” என குறிப்பிட்டு பேசியுள்ளார் சஞ்சய் மஞ்சுரோக்கர்.

Mohamed:

This website uses cookies.