உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் அதிர்ச்சி தோல்வி 1

உலகக்கோப்பை நாக் அவுட் சுற்று இரு தினங்களாக நடந்து வருகிறது. மூன்றாவது போட்டியாக ஸ்பெயின் மற்றும் ரஷ்யா அணிகளில், பெனால்ட்டி ஷூட் முறையில் ரஷ்யா அணி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் அதிர்ச்சி தோல்வி 2

துவக்கம் முதல் ஸ்பெயின் ஆதிக்கம்

ஆட்டம் தொடங்கியது முதலே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் சேர்கியோ ராமோஸ் தனது தலையில் முட்டி கோல் போட முயற்சித்தார். ஆனால், எதிரணி வீரரின் காலில் பட்டு போனதால், இது ஸ்பெயின் அணிக்கு எதிரணி போட்டு கொடுத்த கோல் ஆக போனது.

உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் அதிர்ச்சி தோல்வி 3

பின்னர் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ரஷ்யா அணி வீரர் அர்டேம் 1 கோல் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 1-1 என சமநிலையில் முடிந்தது.

அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தின் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்தது. இதனால் ஆட்டத்திற்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

பெனால்ட்டி ஷூட் முறை

உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் அதிர்ச்சி தோல்வி 4

அதிலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனாலிட்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் ஸ்பெயின் அணி ஒரு வாய்ப்பை வீணடிக்க ரஷ்யா அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ரஷ்யா சாதனை

உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின் அதிர்ச்சி தோல்வி 5

1966-ம் ஆண்டிற்கு பிறகு ரஷ்யா அணி காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *