முதல் இந்திய வீரர் என்ற பெருமை... ஐபிஎல் தொடரில் மிகப்பெரும் சாதனை படைத்த சாதனை நாயகன் ருத்துராஜ் கெய்க்வாட் !! 1
முதல் இந்திய வீரர் என்ற பெருமை… ஐபிஎல் தொடரில் மிகப்பெரும் சாதனை படைத்த சாதனை நாயகன் ருத்துராஜ் கெய்க்வாட்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

17வது ஐபிஎல் டி.20 தொடரின் 29வது போட்டியில் சென்னை அணியும், மும்பை இந்தீயன்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்து வருகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதல் இந்திய வீரர் என்ற பெருமை... ஐபிஎல் தொடரில் மிகப்பெரும் சாதனை படைத்த சாதனை நாயகன் ருத்துராஜ் கெய்க்வாட் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் 69 ரன்களும், சிவம் துபே 66* ரன்களும், தோனி 4 பந்தில் 20* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 206 ரன்கள் குவித்தது.

இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட், இதன் மூலம் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

முதல் இந்திய வீரர் என்ற பெருமை... ஐபிஎல் தொடரில் மிகப்பெரும் சாதனை படைத்த சாதனை நாயகன் ருத்துராஜ் கெய்க்வாட் !! 3

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் ஐபிஎல் தொடரில் 2000 ரன்களை கடந்த ருத்துராஜ் கெய்க்வாட், இதன் மூலம் ஐபிஎல் தொடரில் மிக குறைந்த இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒவ்வொரு தொடரிலும் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ருத்துராஜ் கெய்க்வாட் 57 இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் கவுதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட வீரர்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

மிக குறைந்த இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்த டாப் 3 இந்திய வீரர்கள்; 

ருத்துராஜ் கெய்க்வாட் – 57 இன்னிங்ஸ்

கே.எல் ராகுல் – 60 இன்னிங்ஸ்

சச்சின் டெண்டுல்கர் – 63 இன்னிங்ஸ்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *