வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி ஒருநாள் தொடரை வென்றால், ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் தென்னாபிரிக்கா மீண்டும் முதல் இடத்திற்கு வந்துவிடும்.
ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடிய தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றதும், தென்னாப்ரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்தை பிடித்தது இந்தியா. வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் 3-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி ஒருநாள் தொடரை வென்றால் மீண்டும் முதல் இடத்திற்கு தென்னாபிரிக்கா அணியே வந்து விடும்.
வங்கதேசம் – தென்னாபிரிக்கா விளையாடவுள்ள 3வது ஒருநாள் போட்டி அன்று இந்தியா – நியூஸிலாந்து அணி முதல் ஒருநாள் போட்டியில் மோதவுள்ளார்கள். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டால் தென்னாபிரிக்கா அணி முதல் இடத்திற்கு சென்றுவிடும்.
அப்படி இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால், அவர்களிடம் 121 புள்ளிகள் இருக்கும். இதனால், வங்கதேசத்துக்கு எதிராக தென்னாபிரிக்கா அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்றால், நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் தான் முதல் இடத்தில் நீடிக்க முடியும்.
இதனால், தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணி முதல் இடத்திற்கு சண்டை போடுவதால், அந்த தொடர்கள் சிறப்பாக இருக்கும். இன்னொரு பக்கம் இலங்கையுடன் பாகிஸ்தான் அணி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணிக்கு 4 புள்ளிகள் கிடைக்கும்.
தென்னாபிரிக்கா vs வங்கதேச தொடர் சூழ்நிலைகள்
3-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா வெற்றி – தென்னாபிரிக்கா 121, வங்கதேசம் 92
2-1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா வெற்றி – தென்னாபிரிக்கா 119, வங்கதேசம் 95
2-1 என்ற கணக்கில் வங்கதேசம் வெற்றி – தென்னாபிரிக்கா 117, வங்கதேசம் 97
3-0 என்ற கணக்கில் வங்கதேசம் வெற்றி – தென்னாபிரிக்கா 115, வங்கதேசம் 100