விராட் கோஹ்லி தான் உலகின் சிறந்த வீரர்… முன்னாள் வீரர் புகழாரம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தான் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் என்று தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டனான தோனி கடந்த வருடம் தானாக முன்வந்து கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து கேப்டனாக நியமிக்கப்பட்ட விராட் கோஹ்லி, இந்திய அணியை வெற்றிப்பாதையில் கம்பீரமாக வழிநடத்தி வருவதோடு, ஒவ்வொரு போட்டியிலும் பல சாதனைகளை அடுக்கி வருகிறார்.

Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS
தென் ஆப்ரிக்கா அணியுடனான நடப்பு தொடரிலும் மாஸ் காட்டி வரும் கோஹ்லி தான் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் என்று தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கிரேம் ஸ்மித் கூறியதாவது “விராட் கோஹ்லி தான் உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர். அவரது ஆட்டத்திறன் வியக்க வைக்கிறது. தனது ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் தனது அணியையும் முதல் ஆளாக நின்று கம்பீரமாக வழிநடத்தி வருகிறார். குறிப்பாக இக்கட்டான பல நேரங்கில் கோஹ்லியின் பேட்டிங் திறமை அபாரமானது. கிரிக்கெட் உலகின் உச்சத்தை கோஹ்லி நிச்சயம் தொடுவார்.