மிக முக்கிய வீரர் இல்லை... இந்திய அணியுடனான ஒருநாள் தொடருக்கான தென் ஆப்ரிக்கா அணி அறிவிப்பு !! 1

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை டெம்பா பவுமா தலைமையில் தென்ஆப்பிரிக்க அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இதில் முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மிக முக்கிய வீரர் இல்லை... இந்திய அணியுடனான ஒருநாள் தொடருக்கான தென் ஆப்ரிக்கா அணி அறிவிப்பு !! 2

இந்த நிலையில் வருகிற ஜனவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான அணியை தென் ஆப்பிரிக்க அணி வெளியிட்டுள்ளது.

இந்த அணியில் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் தென்ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அன்றிச் நோட்சேவிற்கு பதில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான மார்க்கோ ஜான்செனை தென்ஆப்பிரிக்கா அணி இணைத்துள்ளது.

மிக முக்கிய வீரர் இல்லை... இந்திய அணியுடனான ஒருநாள் தொடருக்கான தென் ஆப்ரிக்கா அணி அறிவிப்பு !! 3

இருபத்தி ஒரு வயதாகும் இளம் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் தற்போது நடந்து முடிந்த இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இவரை தவிர்த்து மற்ற அனைவரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரெகுலர் வீரர்களாக விளையாடக் கூடியவர்கள்.

இந்திய அணிக்கு எதிரான தென்ஆப்பிரிக்க அணியின் ஒருநாள் தொடருக்கான வீரர்கள்

டெம்பா பவுமா(c), கேஷவ் மஹராஜ் (vc), குயின்டன் டி காக் (wk), ஜுபைர் ஹம்ஜா, மார்க்கோ ஜான்சன், ஜன்னமன் மலான், சிசண்டா மகலா, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, வெய்ன் பார்னல், அண்டிலே பெளுக்வாயோ, டுவையன் பிரெடோரியஸ், காகிசோ ரபாடா, தப்ரீஸ் சம்சி,ராசி வண்டர் டசன், கயில் வேரின்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *