இந்த இந்திய வீரருக்கு பந்துவீசுறது தான் ரொம்ப கஷ்டம்; ஒப்புக்கொண்ட முன்னாள் ஜாம்பவான்
கிரிக்கெட் உலகின் முன்னாள் ஜாம்பவான்களில் ஒருவரான இயான் பிஷப் தனது கிரிக்கெட் கேரியரில் தனக்கு சவாலாக இருந்த பேட்ஸ்மேனின் பெயரை ஓபனாக தெரிவித்துள்ளார்.
1990 காலங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் இயான் பிஷப்பின் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறாத பேட்ஸ்மேன்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு தனது நேர்த்தியான பந்துவீச்சு மூலம் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருந்தவர் இயான் பிஷப்.
முன்னாள் ஜாம்பவான்களில் ஒருவரான இயான் பிஷப், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். வர்ணனையையும் மிகச்சிறப்பாக செய்து வரும் இயான் பிஷப் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது கிரிக்கெட் கேரியரில் தனக்கு அதிக தொல்லை கொடுத்த பேட்ஸ்மேனின் பெயரை ஓபனாக தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நடத்திய நேர்காணலில் இது குறித்து இயான் பிஷப் பேசியதாவது;
எனது கேரியரில் எனக்கு அதிக தொல்லை கொடுத்த ஒரே ஒரு பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான். அவரின் ஷாட்கள் மிகவும் நேர்த்தியாக இருக்கும். எப்படி பந்துவீசினாலும் சச்சின் டெண்டுல்கர் பதட்டமில்லாமல் நிதானமாக விளையாடுபவர்” என்று தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 43 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 84 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இயான் பிஷப், அதில் 161, 113 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.