இறக்க குனம் நிறைந்த சச்சின் டெண்டுல்கர்; வைரலாகும் வீடியோ

சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர்  தனது வீட்டின் பால்கனியில் அடிபட்டு கிடந்த பறவைக்கு உணவளித்து, அதை மருத்துவ உதவி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் கடவுளாக பார்க்கப்படுபவர், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் விளையாட்டிலிருந்து அவர் ஓய்வுபெற்றிருந்தாலும், அவரின் புகழானது இன்றளவும் வானளவு உயர்ந்துள்ளது.

இந்நிலையில், அவரது வீட்டின் பால்கனியில் கரும்பருந்து ஒன்று, மிகவும் மோசமான நிலையில் அடிபட்டு கிடந்துள்ளது. இதையடுத்து, சச்சின் டெண்டுல்கர் அந்தப் பருந்துக்கு தண்ணீர் வைத்துள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அந்தப் பருந்து அதைப் பருகாமல் இருந்துள்ளது.

இதன்பின் சச்சின், பிரெட் மற்றும் சிக்கன் துண்டுகளை அதற்கு வழங்கியுள்ளார். அதை அந்தப் பருந்து, தட்டுத் தடுமாறி சாப்பிட்டது. அதன் நிலையை உணர்ந்த சச்சின், தனது வீட்டிற்கு விலங்கு ஆர்வலர்களை அழைத்து, அதற்குத் தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இதுக்குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சச்சின், வாயில்லா ஜீவன்கள் அடிப்பட்டிருந்தாலோ, உயிருக்கு போராடினாலோ, அவற்றிக்கு மக்கள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, சச்சினின் இந்த மனிதாபிமான செயலுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

  • SHARE

  விவரம் காண

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி !!

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி ஒவ்வொரு போட்டிக்கும் தேவையான ஆடும் லெவனை தேர்வு செய்வதில்...

  இந்திய அணி அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது; சீன் போடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் !!

  முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 2ம் நாள் முடிவில் 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இஷாந்த் சர்மா...

  ஆர்ச்சரிடன் அடவாடிக்கு ஆப்படித்த ஆஸ்திரேலியா!! இங்கிலாந்துதிற்கு எட்ட முடியாத இலக்கு நிர்ணயம்!

  லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இங்கிலாந்து...

  இஷாந்த் சர்மா 5 விக்கெட் எடுக்க பும்ரா கொடுத்த மிக வித்யாசமான ஐடியா!! இஷாந்த் சர்மா வெளியிட்ட தகவல்

  2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள்...

  அடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு!! ஓய்வை அறிவிக்கப்போகும் சீனியர் வீரருக்கு அணியில் இடம்!!

  நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை-நியூசிலாந்து அணிகள்...