கோஹ்லிக்கு தனது கையால் பரிசளிக்க காத்திருக்கும் கிரிக்கெட் கடவுள் சச்சின் !! 1

கோஹ்லிக்கு தனது கையால் பரிசளிக்க காத்திருக்கும் கிரிக்கெட் கடவுள் சச்சின்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தனது 49 சதங்கள் சாதனையை முறியடிக்கும் போது அவருக்கு தனது கையாலையே சிறப்பு பரிசு ஒன்று வழங்க காத்துள்ளதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 45 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் சர்வதேச ஒருநாள் போட்டியில் 49 சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார். அதனை இதுவரை எந்த இந்திய வீரரும் உடைத்தது இல்லை. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இதுவரை 35 சதம் அடித்துள்ளார். மிகச்சிறந்த பேட்ஸ்மேனான கோலி விரைவில் சச்சினின் சாதனையை முறியடிப்பார் எனக்கூறப்பட்டது.

கோஹ்லிக்கு தனது கையால் பரிசளிக்க காத்திருக்கும் கிரிக்கெட் கடவுள் சச்சின் !! 2

இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சச்சினிடம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உங்கள் சாதனையை விராட் கோலி முறியடித்தால் அவருக்கு 50 ஒயின் பாட்டில்கள் அனுப்புவீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சச்சின், ‘கோலி என்னுடைய சாதனையை  முறியடித்து 50 சதம் அடித்தால் அவருக்கு 50 ஒயின் பாட்டில் அனுப்ப மாட்டேன். அதற்கு பதிலாக அவருடன் அமர்ந்து ஒயின் சாப்பிடுவேன்’ என கூறினார்.

சச்சினின் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சச்சினின் ஸ்பெஷல் ஷாட், பெஸ்ட் கேட்ச், புகைப்படம் என தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கோஹ்லிக்கு தனது கையால் பரிசளிக்க காத்திருக்கும் கிரிக்கெட் கடவுள் சச்சின் !! 3

இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சச்சினிடம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உங்கள் சாதனையை விராட் கோலி முறியடித்தால் அவருக்கு 50 ஒயின் பாட்டில்கள் அனுப்புவீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சச்சின், ‘கோலி என்னுடைய சாதனையை  முறியடித்து 50 சதம் அடித்தால் அவருக்கு 50 ஒயின் பாட்டில் அனுப்ப மாட்டேன். அதற்கு பதிலாக அவருடன் அமர்ந்து ஒயின் சாப்பிடுவேன்’ என கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *