காயத்தில் இருந்து தோனி தப்பித்து வரும் ரகசியம் இது தான்; முன்னாள் பயிற்சியாளர் வெளியிட்ட ரகசிய தகவல் !! 1

காயத்தில் இருந்து தோனி தப்பித்து வரும் ரகசியம் இது தான்; முன்னாள் பயிற்சியாளர் வெளியிட்ட ரகசிய தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. கடந்த 2019 இல் இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி தோல்விக்கு பின் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இதனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சாதித்து டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடப்பதே சந்தேகமாக உள்ளது.

இதற்கிடையில் கடந்த 2004 இல் இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிமுகமான தோனி, சுமார் 16 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இவர் காயத்தால் அவதிப்பட்டு போட்டிகளை தவறவிடுவது மிகவும் அபூர்வமானது. இதுவரை இந்திய அணிக்காக 350 ஒருநாள், 90 டெஸ்ட் போட்டிகளில் தோனி விளையாடியுள்ளார். இதற்கிடையில் ஐபிஎல் தொடர்களிலும் தோனி கடந்த 2008 முதல் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

காயத்தில் இருந்து தோனி தப்பித்து வரும் ரகசியம் இது தான்; முன்னாள் பயிற்சியாளர் வெளியிட்ட ரகசிய தகவல் !! 2

இந்நிலையில் கடந்த 2011 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர், 2013 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் வெற்றிகளின் போது இந்திய அணியுடன் இருந்த பயிற்சியாளர் ராம்ஜி ஸ்ரீனிவாசன் , தோனியின் ஃபிட்னஸ் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து ராம்ஜி கூறுகையில், “நான் சச்சின், சேவாக், தோனி, ரோஹித் ஆகியோர் ஆக்ரோஷமாக வெயிட் தூக்கி பார்த்ததே இல்லை.

அவர்களும் ஜிம்மில் பயிற்சி செய்வார்கள். அதற்கு ஒரு காரணம் உள்ளது. அவர்கள் ஜிம்மிற்கு சென்றாலும் செல்லவில்லை என்றாலும் அதிக எடையை தூக்கும் வலிமை கொண்டவர்கள். சச்சின் பெரும்பாலும் மணிக்கட்டு மற்றும் தோள்பட்டைகளுக்கு அதிகம் பயிற்சி செய்வார். ஆனால் தோனிக்கு இயற்கையாகவே அந்த சக்தி உள்ளது. அவரின் பணிச்சுமை கொண்டு யாரும் அவ்வளவு எளிதாக பயணிக்க முடியாது. தோனி காயமடைந்த தருணங்களை விரல் விட்டு சொல்லிவிட முடியும்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *