காயத்தில் இருந்து தோனி தப்பித்து வரும் ரகசியம் இது தான்; முன்னாள் பயிற்சியாளர் வெளியிட்ட ரகசிய தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. கடந்த 2019 இல் இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி தோல்விக்கு பின் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இதனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சாதித்து டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடப்பதே சந்தேகமாக உள்ளது.

இதற்கிடையில் கடந்த 2004 இல் இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிமுகமான தோனி, சுமார் 16 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இவர் காயத்தால் அவதிப்பட்டு போட்டிகளை தவறவிடுவது மிகவும் அபூர்வமானது. இதுவரை இந்திய அணிக்காக 350 ஒருநாள், 90 டெஸ்ட் போட்டிகளில் தோனி விளையாடியுள்ளார். இதற்கிடையில் ஐபிஎல் தொடர்களிலும் தோனி கடந்த 2008 முதல் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

காயத்தில் இருந்து தோனி தப்பித்து வரும் ரகசியம் இது தான்; முன்னாள் பயிற்சியாளர் வெளியிட்ட ரகசிய தகவல் !! 1

இந்நிலையில் கடந்த 2011 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர், 2013 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் வெற்றிகளின் போது இந்திய அணியுடன் இருந்த பயிற்சியாளர் ராம்ஜி ஸ்ரீனிவாசன் , தோனியின் ஃபிட்னஸ் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து ராம்ஜி கூறுகையில், “நான் சச்சின், சேவாக், தோனி, ரோஹித் ஆகியோர் ஆக்ரோஷமாக வெயிட் தூக்கி பார்த்ததே இல்லை.

அவர்களும் ஜிம்மில் பயிற்சி செய்வார்கள். அதற்கு ஒரு காரணம் உள்ளது. அவர்கள் ஜிம்மிற்கு சென்றாலும் செல்லவில்லை என்றாலும் அதிக எடையை தூக்கும் வலிமை கொண்டவர்கள். சச்சின் பெரும்பாலும் மணிக்கட்டு மற்றும் தோள்பட்டைகளுக்கு அதிகம் பயிற்சி செய்வார். ஆனால் தோனிக்கு இயற்கையாகவே அந்த சக்தி உள்ளது. அவரின் பணிச்சுமை கொண்டு யாரும் அவ்வளவு எளிதாக பயணிக்க முடியாது. தோனி காயமடைந்த தருணங்களை விரல் விட்டு சொல்லிவிட முடியும்” என்றார். • SHARE
 • விவரம் காண

  டி20 உலகக்கோப்பையை இந்த நாட்டில் நடத்தலாம் – அட்டகாசமான யோசனை சொன்ன முன்னாள் ஜாம்பவான்!

  டி20 உலகக்கோப்பையை இந்த நாட்டில் நடத்தலாம் - அட்டகாசமான யோசனை சொன்ன முன்னாள் ஜாம்பவான்! டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளிவைக்காமல் இந்தநாட்டில் நடத்தலாம் என...

  இங்க இல்லனா அங்க போவேன்! வேறு நாட்டிற்காக விளையாட கிளம்பும் நட்சத்திர வீரர்!

  இங்கிலாந்து அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டால், அமெரிக்க அணிக்காக விளையாடத் தயாராக உள்ளதாக லியம் பிளங்கெட் கூறியுள்ளார். 35 வயது வேகப்பந்து வீச்சாளர் பிளங்கெட்,...

  தோனி, கோலி, ரோஹித் சர்மா செய்யாததை செய்து அசத்திய முகமது ஷமி! வேடிக்கை மட்டும் பார்க்கும் நட்சத்திர வீரர்கள்

  உத்தரப் பிரதேசத்தின் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமட் ஷமி புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் முகக்கவசங்களையும் வழங்கி சமூக சேவையில்...

  டெஸ்ட் தொடருக்கான புதிய அட்டவணை வெளியீடு! அடுத்த மாதம் துவங்கும் – கிரிக்கெட் வாரியம் கொடுத்த ட்ரீட்!

  டெஸ்ட் தொடருக்கான புதிய அட்டவணை வெளியீடு! அடுத்த மாதம் துவங்கும் - கிரிக்கெட் வாரியம் கொடுத்த ட்ரீட்! இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகள்...

  கிரிக்கெட் உலகில் தோனி யார்? சாமர்த்தியமாக யோசித்து பதிலளித்த குமார சங்ககாரா!

  இலங்கை கிரிக்கெட் அணி என்றாலே, நம்மாளுங்களுக்கு ஒருவித காண்டு ஏற்படுவதுண்டு. அதே டீமுகிட்ட தோற்றாலும் பாகிஸ்தானிடமோ, இலங்கையிடமோ, வங்கதேசத்திடமோ இந்தியா தோற்றுவிடக் கூடாது...