இந்த பந்துவீச்சாளரை எதிர்கொள்ள ஆசை உள்ளது; சச்சின் டெண்டுல்கர் ஓபன் டாக் !! 1

சமீபகாலமாக முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு தற்காலிக கிரிக்கெட் வீரர்களில் யார் சிறந்த போட்டியாளர் என்ற விவாதம் பிரபலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இதில் இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

1990 முதல் 2000 வரை கிரிக்கெட் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வந்து சச்சின் டெண்டுல்கர் அனைத்து விதமான பந்துவீச்சாளர்கள் பந்தயும் துவம்சம் செய்தார் சச்சின் டெண்டுல்கருக்கு பந்துவீச அனைத்து பவுளர்களும் அச்சப்படும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார்.

இந்த பந்துவீச்சாளரை எதிர்கொள்ள ஆசை உள்ளது; சச்சின் டெண்டுல்கர் ஓபன் டாக் !! 2

இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்தக் காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த மாயபந்து வீச்சாளரான ரஷித் கானை எதிர்கொள்ள வேண்டும் என ஆசையாக உள்ளது என்று தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான ரசித் கானின் பந்துவீச்சை பற்றி பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் வியப்பாக கூறியிருந்தனர்.

இந்த பந்துவீச்சாளரை எதிர்கொள்ள ஆசை உள்ளது; சச்சின் டெண்டுல்கர் ஓபன் டாக் !! 3

அந்த அளவுக்கு ரஷித் தனது பந்துவீச்சில் பல மாறுதல்களை அடிக்கடி செய்பவர் லெக் ஸ்பின், ஆப் ஸ்பின்,கூக்ளி போன்ற அனைத்தையும் பயன்படுத்தி எதிரணி வீரர்களை திணரசெய்வார். இதனால் ரஷித் கான்பந்துவீச்சை எதிர்கொள்வது சுவாரசியமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருநாள் தொடர்களில் விதிகள் எந்த அளவு பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக உள்ளது என்பது பற்றி அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது நாங்கள் விளையாடும் காலகட்டங்களில் ஒருநாள் போட்டிகளில் ஒரே ஒரு பந்தை மட்டுமே பயன்படுத்துவோம். இதனால் பந்தின் வேகத்தை கணிப்பது சிரமமாக இருக்கும் .

ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு போட்டிக்கு இரண்டு பந்துகளை பயன்படுத்துகிறார்கள் இதனால் சிரமமின்றி பேட்ஸ்மேன்கள் விளையாடுகிறார்கள் என தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *