மகளின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு சச்சின் டெண்டுல்கரின் உருக்கமான பதில்
சர்வதேச கிரிக்கெட்டில் கடவுளாக திகழும் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு அளித்த பதில் பதிவு கிரிக்கெட் ரசிகர்களை அன்பு மழையில் நனையச் செய்தது.
ஒவ்வொரு தந்தைக்கும் அவர்களது பெண் குழந்தைகளிடம் அளவு கடந்த அன்பிருக்கும் என்று கூறலாம். அதே போல் தான் சச்சின் டெண்டுல்கருக்கும். தந்தையர் தினத்தன்று சச்சினின் மூத்த மகளான சாரா டெண்டுல்கர் இன்ஸ்டாகிராம் தளத்தில் தனது அப்பாவுடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, அதில் பாதுகாப்பான, பாசமிகு தந்தையாகவும் விளங்கி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
View this post on InstagramA post shared by Sara Tendulkar (@saratendulkar) on
அதற்கு பதிலளிக்கும் வகையில் சச்சின் பதிவிட்டது கிரிக்கெட் பிரியர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளது. அதில், ‘அர்ஜூன் மற்றும் நீ என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சியான பரிசு. நீங்கள் கிடைக்க நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இருவரும் எப்போதும் எனக்கு சிறிய குழந்தைகள் தான். நீ என்னுடன் இருப்பதற்கு நன்றி’ என சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை என்பதற்கு சச்சின் சிறந்த எடுத்துகாட்டாய் திகழ்கிறார் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர். சச்சினுக்கு பிறகு அவரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஜூனியர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.