JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

சூப்பர் ஓவர் விதிமுறை மாற்றத்துக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முடிவில் சமநிலை (டை) ஏற்பட்டால், முன்பு போல் பவுண்டரி அடிப்படையில் வெற்றி முடிவு செய்யப்படமாட்டாது என்றும் போட்டியில் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறை தொடரும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

ஏனென்றால் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது யார் என்ற வாதம் இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் ஓயவில்லை. குறிப்பாக இறுதிப் போட்டியில் இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பந்து பட்டு பவுண்டரிக்கு சென்ற விவகாரம் பேசுபொருளானது.LONDON, ENGLAND - JULY 14: Ben Stokes of England acknowledges the crowd after victory during the Final of the ICC Cricket World Cup 2019 between New Zealand and England at Lord's Cricket Ground on July 14, 2019 in London, England. (Photo by Mike Hewitt/Getty Images) இதற்கும் மேலாக சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அடித்த 15 ரன்களை, நியூசிலாந்து அடித்த போதிலும், இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணம் ஐசிசி-யின் கிரிக்கெட் விதிமுறையாகும். இந்த விதிப்படி, ஐசிசி தொடர்களின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சூப்பர் ஓவர்கள் சமனில் முடிந்தால், அதிக பவுண்டரிகளை விளாசிய அணியே வெற்றி பெற்றதாகும். இந்த விதியினால் தான் அன்று இங்கிலாந்து கோப்பை பெற்றது. ரசிகர்களின் மனதை வென்றிருந்தாலும் நியூஸிலாந்து கோப்பையை இழந்தது.

இதனால் ரசிகர்கள் முதல் வல்லுநர்கள் வரையிலும் பலரும் இந்த விதிமுறைக்கு எதிராக விமர்சனக் கணைகளைத் தொடுத்தாங்க. சர்ச்சைக்குரிய விதியை மாற்றம் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தினாங்க. இந்த நிலையில துபாயில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், சர்ச்சைக்குரிய பவுண்டரி விதிமுறையை ஐசிசி நீக்கியிருக்காங்க.

இனிமேல் ஐசிசி தொடர்களில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளின் சூப்பர் ஓவர்கள் டையில் முடிந்தால், பவுண்‌டரிகளின் அடிப்படையில் போட்டியின் முடிவு எட்டப்படாது. ஒரு அணி, மற்றொரு அணியை விட அதிகமாக ரன்கள் சேர்க்கும் வரை, சூப்பர் ஓவர்கள் வீசப்படும் என புதிய முறை அறிமுகப்படுத்திருக்காங்க.ஐசிசி சொன்ன சூப்பர் ஓவர் விதிமுறைக்கு புதிய மாற்றம் சொன்ன சச்சின் டெண்டுல்கர்! 1

ஐ.சி.சி.யின் முடிவை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘போட்டியில் மோதும் இரு அணிகளுக்கு இடையே வெற்றி வித்தியாசம் கிடைக்காத நிலையில் ஒரு அணி வெற்றி பெறும் வரை சூப்பர் ஓவர் தொடரும் என்று முடிவு செய்து இருப்பது முக்கியமானது மட்டுமின்றி முடிவை பெறுவதற்கான நியாயமான வழிமுறையாகவும் நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில், ‘இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தாதாவுக்கு (சவுரவ் கங்குலியின் செல்லப்பெயர்) வாழ்த்துகள். நீங்கள் எப்பொழுதும் செய்து இருப்பது போல் இந்திய கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து சேவையாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். • SHARE
 • விவரம் காண

  இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் !!

  இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் முதல் 45 நிமிடங்கள் ரோஹித் சர்மா நிலைத்து...

  அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் !!

  அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் சீனியர் வீரர்களில் ஒருவரான ரஹானே இந்திய அணியில் இருந்து முழுவதுமாக புறக்கணிப்பட்டது...

  கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு !!

  கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கவுதம்...

  இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

  இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து இளம் வீரரான ப்ரிதீவ் ஷா, முன்னாள் வீரர் சேவாக்கை போன்று...

  ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் !!

  ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெறாமல் இந்த ஆண்டு நிறைவடைவதை தன்னால் நினைத்து கூட...