கொரானா வைரசால் உயிரை இழந்த சச்சின் டெண்டுல்கரின் நண்பர் ! நினைவுகளை இழந்து விட்டேன் என்று சச்சின் டெண்டுல்கர் உருக்கம் ! 1

கொரானா வைரசால் உயிரை இழந்த சச்சின் டெண்டுல்கரின் நண்பர் ! நினைவுகளை இழந்து விட்டேன் என்று சச்சின் டெண்டுல்கர் உருக்கம் !

இந்திய அணியின் முன்னாள் வீரரும் சச்சின் டெண்டுல்கரின் நண்பர் விஜய் ஷிர்கே கொரானா வைரஸ் தொற்று காரணமாக தன்னுயிரைக் இழந்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் மும்பை கிளப் அணிகளில் ஆடியதன் மூலம் 16 வயதிலேயே இந்திய அணியில் இடம் பிடித்தவர். அதன் பின்னர் 24 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடியவர்.

குறிப்பாக கிளப் அணிக்காக ஆடிய போது சச்சின் டெண்டுல்கருக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். அதிலும் பள்ளிக் காலத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு இணையாக பலம் வாய்ந்த வீரர்கள் அவருடன் விளையாடி இருக்கின்றனர். அவர்களில் விஜய் ஷிர்கேவும் ஒருவர். சமீபத்தில் இவருக்கு கொரானா வைரஸ் தோன்றியது. இதனால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டு இருந்தார்.

கொரானா வைரசால் உயிரை இழந்த சச்சின் டெண்டுல்கரின் நண்பர் ! நினைவுகளை இழந்து விட்டேன் என்று சச்சின் டெண்டுல்கர் உருக்கம் ! 2

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வந்தாலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களில் உள்ள நண்பர்கள் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர். சச்சின் டெண்டுல்கருக்கு எனக்கும் உள்ள நட்பு பற்றி பலமுறை பேசியிருக்கிறார். விஜய் இது குறித்து அவர் ஒருமுறை கூறுகையில்.

சச்சின் டெண்டுல்கர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது எனக்கும் அவருக்கும் மாதம் 200 ரூபாய் ஊக்கத் தொகை கொடுத்து சன்கிரேஸ் மஃபட்லால் கிளப் அந்த தொகையை நான் வினோத் காம்ப்ளி சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் பிரித்து சரியாக வைத்துக் கொள்வோம். என்னை மற்றவர்கள் விசா என்று அழைப்பார்கள் என்று முன்னர் ஒருமுறை கூறியிருக்கிறார்.

கொரானா வைரசால் உயிரை இழந்த சச்சின் டெண்டுல்கரின் நண்பர் ! நினைவுகளை இழந்து விட்டேன் என்று சச்சின் டெண்டுல்கர் உருக்கம் ! 3

இந்நிலையில் இவரது இழப்பிற்கு சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக டுவிட் செய்து இருக்கிறார். அந்த வீட்டில் விஜய் ஷிர்கேவை எனக்கு 15 வயது முதல் தெரியும். இருவரும் ஒன்றாகப் பல மணி நேரங்களைக் கழித்துள்ளோம். அந்த நினைவுகள் என்னிடம் எப்போதும் இருக்கும். அவருடைய குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறியுள்ளார். 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *