தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன்பாக அஸ்வின் குறித்து சச்சின் டெண்டுல்கர் தெரிவித்த கருத்து தற்போது உண்மையாக உள்ளது.
இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
போட்டி துவங்குவதற்கு முன்பாக இந்திய அணியில் அஸ்வின் பங்களிப்பு குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசினார். அப்போது, அஸ்வின் டெஸ்ட் அணியில் இன்றியமையாத வீரராக இருப்பார். பந்துவீச்சில் மட்டுமல்ல பேட்டிங்கிலும் தனது பங்களிப்பை சிறப்பாக தந்திருக்கிறார். கடந்த சில மாதங்களாக அணியில் இடம்பெறாதது உண்மைதான். ஆனால், ஒரு சிறந்த வீரனுக்கு ஏற்ற இறக்கம் சாதாரண ஒன்று. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இவரின் பங்களிப்பு இந்தியா தொடரை கைப்பற்றியது உதவும் என கணித்து கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் வெளியில் அமர்த்தப்பட்டார். ஆனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் சச்சின் கூறியது போலவே, முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டது. இந்தியா டிக்ளேர் செய்தபிறகு பந்துவீச்சில் களமிறங்கிய அஸ்வின் சுழல் பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க வீரர்களை திணறடித்தார்.
இதில் தொடக்க வீரரான மார்கரம் அஸ்வின் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். மூன்றாவதாக களம் இறங்கிய டி பிருனை ஆட்டமிழக்கச் செய்து, இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நாளைய போட்டியில் மேலும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என பெரிதும் நம்பப்படுகிறது. சச்சின் கூறியது போலவே இந்த தொடரில் அஸ்வின் சிறப்பாக செயல்பட ஏனைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

அஷ்வின் குறித்த கிரிக்கெட் உலக கடவுளின் கணிப்பு தப்பாகுமா? ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியா முதல் இன்னிங்சில் 502-7 என டிக்ளேர் செய்தது. அடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்கா 39/3 என இரண்டாம் நாள் முடிவில் திணறி வருகிறது.