விராட்கோலி, ரோகித் நெருங்க முடியாத.. சச்சினின் 21 ஆண்டுகால சாதனை! 1

21 ஆண்டுகளாக சச்சின் டெண்டுல்கர் சாதனை முறியடிக்கப்படமால் இருக்கிறது. முறியடிக்க முடியாத சாதனையாகவும் உள்ளது.

2019ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட்கோலி இருவரும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

விராட்கோலி, ரோகித் நெருங்க முடியாத.. சச்சினின் 21 ஆண்டுகால சாதனை! 2

விராட்கோலி 26 போட்டிகளில் 1377 ரன்கள் அடித்துள்ளார். இதில் 5 சதங்கள் மற்றும் 7 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 133 ரன்கள் நடித்திருந்தார். துவக்க வீரர் ரோகித் சர்மா 28 போட்டிகளில் 1490 ரன்கள் அடித்துள்ளார் இதில் 7 சதங்கள் 6 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 159 ரன்கள் அடித்தார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 1998ம் ஆண்டு 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1894 ரன்களை குவித்தார். அந்த ஆண்டில் மட்டும் 9 சதங்களை விளாசியிருக்கிறார் சச்சின். குறிப்பாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டுமே 4 சதங்களை விளாசியிருக்கிறார். இதில் 188 பவுண்டரிகள், 40 சிக்ஸர்கள், 7 அரைசதங்களும் அடங்கும்.

விராட்கோலி, ரோகித் நெருங்க முடியாத.. சச்சினின் 21 ஆண்டுகால சாதனை! 3

இரண்டாவது இடத்தில கங்குலி 1328 ரன்கள் நடித்திருந்தார். கிட்டத்தட்ட இரண்டாவது வீரரை விட சச்சின் 550 ரன்கள் அதிகமாக நடித்திருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில், முதல் ஐந்து இடங்களில், சச்சின்(1998), கங்குலி, டிராவிட், சச்சின்(1996) மற்றும் ஹைடன் ஆகியோரே இருக்கின்றனர். இந்த பட்டியலில் ரோகித் சர்மாவுக்கே 8வது இடம் தான்.

சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகள் இன்றளவும் முறியடிக்கப்படாமல் இருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்கவையாக, இந்த ஒரு ஆண்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் சாதனை இருக்கிறது. மேலும், ஒரே ஆண்டில் 9 ஒருநாள் சதங்களும் தகர்க்க முடியாத சாதனையாக கருதப்படுகிறது.

விராட்கோலி, ரோகித் நெருங்க முடியாத.. சச்சினின் 21 ஆண்டுகால சாதனை! 4

21 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருப்பது சச்சினின் அசத்திய பேட்டிங்கை பறைசாற்றுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *