இந்திய அணியின் டெஸ்ட் போட்டி விக்கெட் கீப்பர் விருதிமான் சஹா, காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த மாதம் இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதனால், ஆஸ்திரேலியா தொடரில் ஆடுவதும் சந்தேகம்.
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் சஹா, 33 வயதில் உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெட்ரா பிறகு முதன்மை விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார் சஹா.

இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்திய அணி தென்னாபிரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டது. அதன் முதல் டெஸ்ட் போட்டியில் சஹா பந்தை பாய்ந்து பிடிக்கையில், தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் ஆடவில்லை. தொடரிலிருந்து வெளியேறினார்.
ஐபில் போட்டிகளில் ஆடுகையில் பெரிதும் சிரமப்பட இருக்காது என்பதால் அணியில் இடம் பெற்றார். ஆனால், போட்டியின் நடுவில் பெருவிரலில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக, ஆப்கானிஸ்தான் அணியுடனான ஒரு டெஸ்ட் கொண்ட தொடரில் சஹா நீக்கப்பட்டு, தினேஷ் கார்த்திக் வாய்ப்பளிக்கப்பட்டார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் குணமடைந்து மீண்டும் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போது, காயம் குணமடையாததால் அவர் 18 பேர் கொண்ட பட்டியலில் அவர் இடம் பெறவில்லை.
அவருக்கு பதிலாக அணியில் இடம்பெற்ற தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரையும் கீப்பிங் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

தற்போது சர்வதேச கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சஹாவின் உடல்நல ஆலோசகர் கூறுகையில், சஹா இன்னும் குணமடையவில்லை. அவர் தோள்பட்டை அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆகா வேண்டும். இரு மாதங்கள் அவர் பேட் எதுவும் தொட கூடாது. அதன் பிறகு பரிசோதித்த பிறகே ஆட அனுமதிப்போம் என கூறினார்.
அடுத்தமாதம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள சஹா இங்கிலாந்து செல்கிறார். அதன் பிறகு இரு மாதம் அவர் ஓய்வு பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால், சஹா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பதும் சந்தேகம் என தெரியவந்துள்ளது.