இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை திருமணம் செய்துள்ளார்.
இங்கிலாந்து – இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த ஜஸ்பிரித் பும்ரா திடீரென 4வது மற்றும் டி20 போட்டியில் இருந்து விலகினார். இதற்கான காரணம் அப்போது யாருக்கும் தெரியவில்லை. இதையடுத்து தான் ஜஸ்பிரித் பும்ரா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை திருமணம் செய்துக்கொள்ளும் தகவல் வெளியானது.

ஆரம்பத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரனை பும்ரா திருமணம் செய்யப்போவதாக தகவல் தொடர்ந்து வெளியாகி வந்தது. ஆனால் இதனை அனுபமாவின் தாய் சுனிதா மறுத்திருந்தார். இதையடுத்து ஜஸ்பிரித் பும்ராவுக்கும் சஞ்சனா கணேசனுக்கும் கடந்த 15ம் தேதி திருமணம் நடைபெற்றது. பும்ராவுடன் விளையாடிய வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் என அனைவரும் பும்ராவிற்கு திருமண வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசனின் மெஹந்தி விழா புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் சஞ்சனா கணேசன் மெஹந்தி போட்டுக்கொண்ட புகைப்படம் இருந்தது. இந்த புகைப்படம் யாரும் எதிர்பாராத அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
ஏன்னெறால் சஞ்சனா கணேஷ் போட்டுக்கொண்ட மெஹந்தியில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பையின் லோகா இருந்தது. சஞ்சனா கணேசன் இந்த லோகாவை மெஹிந்தியின் நடுவில் போட்டு இருக்கிறார். இதன்மூலம் அவர் கிரிக்கெட் மீது வைத்திருக்கும் அன்பு தெரிகிறது. இதற்காக அனைவரும் சஞ்சனா கணேசனை பாராட்டி வருகின்றனர். மேலம் ரசிகர்கள் சிலர் அப்போது தான் இவர்களது காதல் முடிவுக்கு வந்தாகவும் கூறியு வருகின்றனர்.
