பிசிசிஐ நிர்வாகம் சில தினங்களுக்கு முன்பு ராகுல் டிராவிட், ரவி சாஸ்திரி இருவருக்கும் மற்றும் சில முன்னாள் இந்திய வீரர்களுக்கும் சம்பள பாக்கியை செலுத்தியது. மேலும், அதே சம்பளம் அடுத்து வரும் மாதங்களுக்கும் தொடரும் எனவும் கூறியது.
இந்திய அணியின் பயிற்சியாளராக 2017ம் ஆண்டு முதல் ரவி சாஸ்திரி இருந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பாக பிசிசிஐ நிர்வாகம் பயிற்சியாளர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்தது. ஆனால், உயர்வு எந்த மாதத்தில் இருந்து துவங்கும் என தெளிவாக தெரிவிக்கவில்லை. இதனால் கிடப்பில் போடப்பட்டது.
மேலும், இந்தியா ஏ அணிக்கும், அண்டர் 19 அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட் க்கும் இந்த விவகாரத்தால் சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை பிசிசிஐ நிர்வாகம் தீர்த்து, கிடப்பில் உள்ள அனைத்து சம்பளத்தையும் அவர்களுக்கு ஒப்படைத்தது.

இதில், இந்திய ஏ அணிக்காக ராகுல் டிராவிட் க்கு மார்ச் மாத சம்பளமாக 40 லச்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த சம்பளம் இனி வரு மதங்களுக்கும் தொடரும் எனவும் பிசிசிஐ அறிவித்தது. அதாவது வருடத்திற்கு 4 கொடியே 86 லட்சம் ஆகும்.
இந்தியா மெயின் அணியின் பயிற்சியாளராக செயல் பட்டு வரும் ரவி சாஸ்திரி க்கு ஏப்ரல் 18 முதல் ஜூலை 17ம் தேதி வரைக்குமான 3 மாத சம்பளமாக ஒரு கொடியே 90 லட்சம் வழங்கியது. அதாவது, மாதத்திற்கு 63 லட்சம் ஆகும். இவர் கிரிக்கெட் உலகில், அதிக சம்பளம் பெறும் பயிரிச்சியாளர்களில் ஒருவர் ஆவார்.
மேலும், சமீபத்தில் தான் கிரேட் ஏ, பி, சி ஆகிய மூன்று விதமான வீரர்களுக்கும் சம்பள விதிமுறைகளையும், உயர்வையும் வழங்கியது. அது மட்டுமில்லாமல் அம்பயர்களுக்கும் சம்பளம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டது.