ஜேசன் ராய்க்கு பதிலாக இங்கிலாந்து அணியில் இடம்பெற்றார் சாம் பில்லிங்ஸ்
இந்திய அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த ஜேசன் ராய்க்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மாலை நடைபெறுகிறது.

இந்நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது போட்டியின் பீல்டிங்கின் போது காயமடைந்த இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய்க்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜேசன் ராய்க்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இளம் பேட்ஸ்மனான சாம் பில்லிங்ஸ் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் டி.20 தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இங்கிலாந்து அணியில் மீண்டும் தேர்வானது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி;
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, கே.எல் ராகுல், தோனி, ஹர்திக் பாண்டியா, சித்தார்த் கவூல், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.
இங்கிலாந்து அணி;
ஜேஸன் ராய், பரிஸ்டவ், இயான் மோர்கன், ஜாஸ் பட்லர், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, டேவிட் வில்லே, லியாம் ப்ளங்கட், அதில் ரசீத், மார்க்