வெறியைக்கக்கிய சுட்டிக்குழந்தை.. பவுலிங்கில் பட்டையகிளப்பிய அர்ஷ்தீப் சிங்.. கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் முதல் வெற்றி! 1

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மழை குறுக்கிட்டதால், டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

மொகாலி மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில், கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்தது.

பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர்களாக பிரப்சிம்ரன் மற்றும் தவான் இருவரும் களமிறங்கினர். இரண்டு சிக்ஸர்கள் இரண்டு பவுண்டர்கள் அடித்து அதிரடியாக துவங்கிய பிரப்சிம்ரன் 12 பந்துகளில் 23 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிவந்த தவான் 29 பந்துகளில் 40 ரன்கள் அடித்தபோது அவுட்டானார்.

வெறியைக்கக்கிய சுட்டிக்குழந்தை.. பவுலிங்கில் பட்டையகிளப்பிய அர்ஷ்தீப் சிங்.. கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் முதல் வெற்றி! 2

மூன்றாவதாக இறங்கிய பனுக்கா ராஜபக்சே 32 பந்துகளில் அரைசதம் அடித்து வெளியேறினார் ஜித்தேஷ் ஷர்மா 21 ரன்கள், சிக்கந்தர் ராசா 16 ரன்கள் அடித்தனர். அடுத்து களமிறங்கிய சுட்டிக் குழந்தை ஷாம் கர்ரன் இரண்டு சிக்ஸர்களுடன் 17 பந்துகளில் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிறகு 191 ரன்கள் அடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

சற்று கடினமான இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு மந்தீப் சிங்(2), குர்பாஸ்(22), அங்குள் ராய்(4) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியதால் கொல்கத்தா அணி 29 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

வெறியைக்கக்கிய சுட்டிக்குழந்தை.. பவுலிங்கில் பட்டையகிளப்பிய அர்ஷ்தீப் சிங்.. கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் முதல் வெற்றி! 3

இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் நித்திஷ் ரானா இருவரும் அணியின் ஸ்கோரை மேலே உயர்த்தினர். துரதிஷ்டவசமாக நித்திஷ் ரானா 24 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் உள்ளே வந்த ரிங்கு சிங் 4 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறியதால், 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் தடுமாற்றம் கண்டது கொல்கத்தா அணி.

உள்ளே வந்த அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல், வந்த வேகத்திலேயே மூன்று பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் அடித்தாலும், இறுதிவரை நின்று ஆட்டத்தை முடித்துக்கொடுக்கவில்லை. 19 பந்துகளில் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். ரசல் அவுட்டானதால் பஞ்சாப் அணிக்கு அழுத்தம் குறைந்தது.

வெறியைக்கக்கிய சுட்டிக்குழந்தை.. பவுலிங்கில் பட்டையகிளப்பிய அர்ஷ்தீப் சிங்.. கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் முதல் வெற்றி! 4

நன்றாக ஆடிவந்த வெங்கடேஷ் ஐயரும் 34 ரன்களுக்கு அவுட்டமிழக்க, பஞ்சாப் அணியை வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்தது. களத்தில் சர்துல் தாக்கூர் மற்றும் சுனில் நரேன் இருவரும் இருந்தனர். 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா அணி.

போட்டியின் நடுவே திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. டக்வோர்த் லூயிஸ் முறைப்படி, கொல்கத்தா அணி 7 ரன்கள் பின்தங்கியிருந்தது. கடைசி வரை மழை நிற்கவில்லை. இதனால் டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங், முக்கியமான மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். 3 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இவருக்கு ஆட்டநாயகன் விருதும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

வெறியைக்கக்கிய சுட்டிக்குழந்தை.. பவுலிங்கில் பட்டையகிளப்பிய அர்ஷ்தீப் சிங்.. கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் முதல் வெற்றி! 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *