வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திரத்திற்கு கொரோனா? பரிசோதனைக்கு முன்னரே மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி! 1

வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திர வீரருக்கு கொரோனா; இந்த பிரச்சினையால் ஏற்பட்ட விளைவு!

ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்துவந்த சிஎஸ்கே வீரருக்கு காய்ச்சல் வந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் எனும் பெரும் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் நாளொன்றிற்கு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தினால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திரத்திற்கு கொரோனா? பரிசோதனைக்கு முன்னரே மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி! 2

தற்போதுள்ள நிலையில் இந்தியாவில் பயிற்சிகள் துவங்குவதற்கு இன்னும் ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஆகலாம் பிசிசிஐ தெரிவித்துவிட்டது. ஆனால் இங்கிலாந்தில் கொரோனா தாக்கம் குறைவாக இருப்பதால்,  ஜூன் மாதத்தின் துவக்கத்திலேயே வீரர்கள் பயிற்சியை தொடங்கி ஜூலை மாதம் எட்டாம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கின்றனர்.

சுமார் இரண்டு மாத காலத்திற்கு பிறகு நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இந்த டெஸ்ட் தொடரின் பயிற்சிக்கு முன்பாக, இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து தனித்தனியாக பயிற்சியில் ஈடுபட வைத்தனர். 

வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திரத்திற்கு கொரோனா? பரிசோதனைக்கு முன்னரே மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி! 3

14 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருமுறை  பரிசோதனை செய்து நெகட்டிவ் என வந்த பிறகு இயல்பான பயிற்சிக்கு வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தொடருக்கான இரு அணி வீரர்களும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

இதில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்தவருமான சாம் கரன் இடம்பெற்றிருக்கிறார். இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக அதிக காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு இருந்துள்ளது. இதனால் பயிற்சியில் ஈடுபடாமல் தனியறையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

வீட்டிலேயே இருந்த சிஎஸ்கே நட்சத்திரத்திற்கு கொரோனா? பரிசோதனைக்கு முன்னரே மருத்துவர்கள் கொடுத்த அதிர்ச்சி! 4

இந்த காய்ச்சல் காரணமாக, கொரோனா அவருக்கு  இருக்கலாம் என பரிசோதனை செய்த பின்னர் முற்றிலுமாக தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். பரிசோதனை முடிவுகள் இன்னும் வராத நிலையில், கொரோனா இருக்கும் அறிகுறிகள் அனைத்தும் இவருக்கு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இது குறித்து அணி நிர்வாகம் கூறுகையில். “சாம் கரன், காய்ச்சல் காரணமாக மருத்துவ குழுவினர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து, இறுதி முடிவுகள் வருவதற்காக காத்திருக்கிறோம். அவர் தற்போதுவரை முழுமையாக தனிமை படுத்தப்பட்டுள்ளார். மற்ற வீரர்கள் எவரும் தொடர்பு கொள்ளாத வண்ணம் இருக்கிறார். கொரோனா  இருப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனாலும், இறுதி முடிவுக்காக காத்திருக்கிறோம்.” என்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *