தந்தை ட்ராவிட் போல் வளரும் சமித் ட்ராவிட் 1

அவரின் பெயரின் பின்னால் உள்ள ட்ராவிட் என்ற சொல்லே போது 12 வயது அமித் ட்ராவிட் மேல் உள்ள அழுத்ததை சொல்லிவிடும். ஒரு ஜாம்பவான் மகன் என்பதால் பலரும் நன்றாக் ஆடி அவரைப் போலவே சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவார் என அனைவருமே எதிர்பார்ப்பது எதார்த்தமான் ஒன்று.தந்தை ட்ராவிட் போல் வளரும் சமித் ட்ராவிட் 2

முன்னாள் இந்திய வீரர்களின் கிரிக்கெட் வாரிசுகள் என்றாலே அவர்களும் கிரிக்கெட் தான் ஆட வேண்டும், அவர்களும் அவர்களது தந்தைகளைப் போலவே ஜொலிக்க வேண்டும் என எண்ணுவது மக்களின் எதிர்பார்ப்பாகிவிட்டது.

அந்த நிலையில் கவாஸ்கர் மகன் ரோகன் கவாஸ்கர் முதல் தற்போது ஸ்டூவர்ட் பின்னி வரை வாரிசுகள் சோபிக்காத நிலையையே பார்க முடிகிறது, யோகராஜ் சிங்கின் மகன் யுவராஜ் சிங் மட்டுமே அவரது தந்தையையும் மிஞ்சி புகழின் உச்சியைத் தொட்டவர்.

தற்போது , சச்சின் டெண்டுல்கர் மகமன் அர்ஜின் டெண்டுகர் மற்றும் ராகுல் ட்ராவிட் மகன் சமித் ட்ராவிட் இருவரும் தான் வாரிசு ஹைலைட். அர்ஜுன் டெண்டுகருக்கு தற்போது வயது 17, ஆனால் ராகுல் மகன் அமித்திற்கு வயது 12 தான். அர்ஜுன் டெண்டுகர் இடது கை வேக்ப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஆவார்.samit

தற்போது அர்ஜுன் மும்பை அண்டர்17 அணியின் தேர்வாக அனைவரது எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யத்துவங்கியுள்ளார். அதே அளவு அழுத்தத்துடன் ஆடித் துவங்கியுள்ளார்.

தற்போது அற்புதமான பேட்ஸ்மேனாக உருவாகத் தயாராகி விட்டார் சமித். கடந்த வருடம் அண்டர்-14 கிரிக்கெட் விளையாட்டில் அற்புதமாக ஆடிய சமித் 125 ரன்கள் அடித்து விளாசியுள்ளார். இந்த ஆட்டத்தில் 22 ஃபோர்களும் ஒரு சிக்சரும் அடங்கும். இதே போல் பல முறைகள் பள்ளிகளுக்கு இடையேயான் போட்டிகளில் அற்புதமாக ஆடியுள்ளார் சமித்.தந்தை ட்ராவிட் போல் வளரும் சமித் ட்ராவிட் 3

இலங்கையின் முன்னாள் சுழற்ப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்த சிறுவனிடம் அற்புதமான திறமை இருக்கிறது என பாராட்டியுள்ளார். 12 வயதே ஆன அமித்திடம் இவ்வளவு சீக்கிரத்தில் அவரது தந்தையைப் போல் ஆட்டத்தை எதிர்பார்ப்பது தற்போது தவறு தான் என்பதை நாம் உணர்ந்து அவருக்கு சரியான தளமும் வாய்ப்பும் அமையும் வரை நாம் பொருத்திருக்க வேண்டும்.

Leave a comment

Your email address will not be published.