நடப்பு ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒரு போட்டியில் கூட விளையாடாத சென்னை அணியின் கேப்டன் தோனி, முன்னாள் வீரர் சங்ககாரா தனது ஆலோசனையை கூறியுள்ளார்.
2020க்கானா ஐபிஎல் போட்டி தொடரில் எதிர்பாராதவிதமாக சென்னை அணி பிளே ஆஃப் கூட தகுதி பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் கவலையை அளித்துள்ளது.
சென்னை அணியின் தொடர் தோல்விகளுக்கு அந்த அணியில் இளம் வீரர்கள் யாரும் இல்லாததும், தோனி உள்பட சென்னை அணியின் ஒரு சீனியர் வீரர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாததும் தான் காரணமாக பார்க்கப்படுகிறது.

சிறந்த ஃபினிஸ்ஸர் ஆன தல தோனி இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டித் தொடரில் 13 போட்டிகளில் பங்கேற்று ஒரு போட்டியில் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.இது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இதனால் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் சென்னை அணியின் மிக மோசமான விளையாட்டு குறித்து தங்களது கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அதே போல் சென்னை அணிக்கான தங்களது அட்வைஸ்களையும் முன்னாள் வீரர்கள் பலர் தொடர்ந்து கூறிய வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில், சென்னை அணி மற்றும் தோனி குறித்து பேசிய முன்னாள் இலங்கை வீரர் சங்ககாரா தோனிக்கான தனது அட்வைஸை ஓபனாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து சங்ககாரா பேசுகையில், “தோனி கடைசியாக விளையாடியது உலகக் கோப்பை நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி ஆகும் அத்துடன் அவர் தன் சர்வதேச கிரிக்கெட் போட்டி அனைத்திலிருந்தும் ஓய்வை அறிவித்தார். அதன்பிறகு அவர் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை ஐபிஎல் போட்டி தொடர் ஆரம்பித்து ஒரு மாதத்திற்கு முன்பாக மட்டுமே பயிற்சி எடுத்துக் கொண்டார் அந்தப் பயிற்சி அவருக்கு கைகொடுக்கவில்லை அவரால் சறியான டைமிங்கில் பந்துகளை சந்திக்கமுடியவில்லை இன்னும் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அடுத்த வருட ஐபிஎல் தொடரில் தகுந்த பயிற்சியுடன் விளையாடுங்கள் என்றும் சங்ககாரா அறிவுறுத்தியுள்ளார்