2018ம் ஆண்டில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளின் முழு பட்டியல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி தானாக முனந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட கோஹ்லி, இந்திய அணியை தொடர்ந்து வெற்றிப்பாதையில் வழிநடத்தி வருகிறார்.
அசைக்க முடியாத முழு பலம் பொருந்திய அணியாக இந்திய அணியை கோஹ்லி வழிநடத்தி வருவதோடு, தனது தனிப்பட்ட பேட்டிங்கிலும் அதிக கவனம் செலுத்தி ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளை அடுக்கி வருகிறார்.
இந்த ஆண்டின் துவக்கமான ஜவவரி மாதத்தில் தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இதில் டெஸ்ட் தொடரை மட்டும் 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கிலும், டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் கெத்தாக கைப்பற்றி வரலாறு படைத்தது. இது மட்டுமல்லாமல் இந்த ஆண்டை அபார வெற்றியுடனும் துவங்கியுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி இந்த ஆண்டு முழுவதும் பங்கேற்ற மற்றும் பங்கேற்க உள்ள தொடர்கள் மற்றும் போட்டிகள் குறித்த முழு விபரத்தை இங்கு பார்போம்.
தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம்;
மூன்று டெஸ்ட் போட்டிகள்;
கேப்டவுன் மைதானம்; முதல் டெஸ்ட் – ஜனவரி 5-9
செஞ்சூரியன் மைதானம்; இரண்டாவது டெஸ்ட்- ஜனவரி 13-17
ஜோஹன்ஸ்பெர்க்; மூன்றாவது டெஸ்ட்
ஆறு ஒருநாள் போட்டிகள்;
டர்பன் மைதானம்; முதல் ஒருநாள் போட்டி – பிப்ரவரி 1
செஞ்சூரியன்; இரண்டாவது போட்டி – பிப்ரவரி 4
கேப்டவுன்; மூன்றாவது போட்டி – பிப்ரவரி 7
ஜோஹஸ்பெர்க்; மூன்றாவது போட்டி – பிப்ரவரி 10
எலிசபெத் – ஐந்தாவது போட்டி – பிப்ரவரி 13
செஞ்சூரியன் – ஆறாவது போட்டி – பிப்ரவரி 16
மூன்று டி.20 போட்டிகள்;
ஜோஹன்ஸ்பெர்க்; முதல் டி.20 – பிப்ரவரி 18
செஞ்சூரியன்; இரண்டாவது டி.20 – பிப்ரவரி 21
கேப்டவுன்; மூன்றாவது டி.20 – பிப்ரவரி 24
இதன் பின் இந்திய அணி வங்கதேசம், இலங்கை அணிகளுடனான முத்தரப்பு டி.20 தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் வரும் 6ம் தேதி துவங்கி 18ம் தேதி நடைபெறுகிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம்;
மூன்று டி.20
முதல் டி.20 போட்டி – ஜூலை 3
இரண்டாவது டி.20 போட்டி – ஜுலை 6
மூன்றாவது டி.20 போட்டி – ஜூலை 8
மூன்று ஒருநாள் போட்டிகள்;
முதல் போட்டி – ஜூலை 12
இரண்டாவது போட்டி – ஜூலை 14
மூன்றாவது போட்டி – ஜூலை 17
ஐந்து டெஸ்ட் போட்டிகள்;
முதல் போட்டி – ஆகஸ்ட் 1-5
இரண்டாவது போட்டி – ஆகஸ்ட் 9-13
மூன்றாவது போட்டி – ஆகஸ்ட் 18-22
நான்காவது போட்டி – ஆகஸ்ட் 18- 22
ஐந்தாவது போட்டி – செப்டம்பர் 7- 11
இதன் பின் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.
அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி, விண்டீஸ் அணியுடன் மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் ஆக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.
இதன் பின் நவம்பர் மாத துவங்கத்தில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடனான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் நவம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை நடக்கிறது.