2021 காண ஐபிஎல் போட்டி வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ளது இந்த போட்டியில் எப்படியாவது கோப்பையை பெற்று விட வேண்டும் என்று அனைத்து அணிகளும் தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 12ஆம் தேதி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு இரு அணி வீரர்களும் தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக இந்த ஐபிஎல் போட்டி பயோ பபுள் விதிமுறைகளை பின்பற்றி நடக்க இருக்கிறது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான பயோ பப்பில் விதியை கடைபிடித்து கொண்டிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியன் பராக் ஐபிஎல் போட்டி பயிற்சிக்கு முன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அப்போது சமூகவலைதளங்களில் தன் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில் ரசிகர் ஒருவர் எந்த பந்துவீச்சாளரை சமாளிப்பது உங்களுக்கு கடினம் என்று கேள்வி கேட்டார் அதற்கு பதிலளித்த அவர் நிச்சயம் அது இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தான், அவருடைய பந்துவீச்சை சமாளிப்பது என்பது ஒரு கெட்ட கனவு போன்று இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் அவரிடம் உங்களுக்கு எந்த ஐபிஎல் அணிக்கு எதிராக விளையாட பிடிக்கும் என்று கேட்டதற்கு அவர் இரண்டு முறை டைட்டில் பட்டத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அந்த அணியில் பல திறமையான வீரர்கள் உள்ளார்கள் என்று பதிலளித்தார். மேலும் தனக்கு புல் சாட் அடிப்பது மிகவும் பிடிக்கும் ஏனென்றால் அந்த ஒரு சாட்டை கொண்டு தான் அதிகமான ரன்களை குவித்து உள்ளேன் என்று தெரிவித்தார்.
19 வயது ஆகும் அஸ்ஸாம் அணியின் கேப்டன் ரியன் பரக் 13 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 246 ரன்களை எடுத்துள்ளார் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 121.18, மேலும் அவரேஜ் 20.5