இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நேற்று கொடுத்த பேட்ட்யின் போதும், சேவாக் அணிக்கு வெளளியே இருந்த இடம் தெரியாமல் இருப்பார் எனக் கூறியுள்ளார்.
நேற்று நடந்த இந்தியா டுடேவின் ஈஸ்ட் கான்க்விலேவில் சௌரவ் கங்குலி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதில் அவர் கூறியதாவது,
நான் 2000த்தில் அணியின் கேப்டன் ஆன போது, இந்த அணியை நாம் வித்யாசமாக செயல்படுத்த வேண்டும் என நினைத்தேன். மேலும், இந்தியர்களாக நாங்கள் சற்று பின்னடைந்திருந்தோம்.
என் அணியில் சேவாக் இருந்தார். சுனில் கவாஸ்கருக்குப் பிறகு இந்திய அணிக்கு அவர் தான் மிகச்சிறந்த ஓப்பனர். ஆனால், மைதானத்தை விட்டு வெளியே வந்துவிட்டால் சேவாக் என்று ஒரு மனிதர் இருப்பதே தெரியாது. போட்டி முடிந்து வந்தால் தூங்கிவிடுவார். டெஸ்ட் போட்டிகு முன்னர் நாம் தான் அவரை எழுப்பி விட்டு போய் பேட்டிங் செய் எனக் கூற வேண்டும்.
இவ்வாறு தனது நினைவுகளை கூறினார் முன்னாள் கேப்டன்
கங்குலி இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட போது இந்திய அணி மேட்ச் ஃபிங்க்சிங் பிரச்சனையில் மாட்டி இருந்தது. அப்போது அணியை உத்வகமான ஒரு யூனிட்டாக மாற்ற வேண்டும் என அற்புதமாக செயல்பட்டார் கங்குலி. இவரருடைய தலைமையில் தான் இந்திய அணி வெளிநாட்டு சீரியஸ் என பலவற்றை வெல்லக் கற்றுக் கொண்டது.
மேலும், இது குறித்து அவர் கூறியதாவது
2001ல் இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்த போது நான் பார்த்த இந்திய அணியை விட அந்த அணி வித்யாசமா அணியில் துடிப்பாக இருந்தது. அப்போது தான் உணர்ந்தேன் அந்த துடிப்பை ஆடுகளத்தில் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டியது தான் என் வேலை என.
தற்போது இந்திய அணி தேர்வு மிகவும் தெளிவாக இருக்கிரது. அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக கொண்டு செல்கிறார் கோலி. கிரிக்கெட் ஒரு கேப்டனின் விளையாட்டு
எனக் கூறினார் சௌரவ் கங்குலி.
வாழ்க்கையில் எப்போது மாற்றம் ஏற்படும் என்று கூற இயலாது. 1999-ம் ஆண்டு ஆஸ்திரேலிய பயணத்தின் போது எனக்கு துணை கேப்டன் பதவி கிடைக்கவில்லை. அப்போது சச்சின் கேப்டன் ஆக இருந்தார். ஆனால் 3 மாதத்தில் எனக்கு கேப்டன் பதவியே கிடைத்தது.
இந்திய அணிக்கு பயிற்சியாளராக வர வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தேன். ஆனால் டால்மியாவோ என்னை நிர்வாகியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். 6 மாதம் கழித்து முயற்சிக்கலாம் என்றார். ஆனால் அதற்குள் அவர் மறைந்துவிட்டார். அதோடு எனக்காக வாய்ப்பும் இல்லாமல் போனது. எனவே நான் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவரானேன்.