ஓசில கூல் டிரிங்ஸ் குடிக்க தான் வருவான் போல; சீனியர் வீரரை கடுமையாக விமர்சித்த சேவாக் !! 1

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் களான விரேந்தர் சேவாக் கிளன் மேக்ஸ்வெல்லை மிகவும் மோசமான முறையில் விமர்சித்துள்ளார்.

ஷேவாக் தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் கூறியதாவது, மேக்ஸ்வெல் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடுகிறார் ஆனால் அவர் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை அவர் பஞ்சாப் அணிக்கு தேர்வாகி கூல்டிரிங்ஸ் குடிப்பதற்காக மட்டுமே உள்ளார் என்று விரேந்தர் சேவாக் கடுமையாக சாடியுள்ளார்.

ஓசில கூல் டிரிங்ஸ் குடிக்க தான் வருவான் போல; சீனியர் வீரரை கடுமையாக விமர்சித்த சேவாக் !! 2

இது கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய அணி வீரரான மேக்ஸ்வெல் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் இவரை எப்படியாவது அவுட் ஆக்க வேண்டும் என்று அவருக்கென தனி வியூகம் வகுத்த நாட்களும் உண்டு, அந்த அளவுக்கு அவர் சிறந்து விளங்கினார்.

ஓசில கூல் டிரிங்ஸ் குடிக்க தான் வருவான் போல; சீனியர் வீரரை கடுமையாக விமர்சித்த சேவாக் !! 3

ஆனால் தற்போது நடந்த 2020க்கானா ஐபிஎல் போட்டியில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை பௌலிங் மற்றும் பேட்டிங்கில் மிகமோசமான பங்களிப்பை வெளிப்படுத்தினார்.இவர் 13 போட்டிகளில் பங்கேற்று 108 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

தற்போது நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 2-1 என தோல்வியை தழுவியது. அடுத்து களமிறங்கிய டி20 தொடரில் 2-1 என்று ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற்றது.

ஓசில கூல் டிரிங்ஸ் குடிக்க தான் வருவான் போல; சீனியர் வீரரை கடுமையாக விமர்சித்த சேவாக் !! 4

இதில் ஆஸ்திரேலியாவுக்காக மேக்ஸ்வல் மிகச் சிறப்பாக செயல்பட்டார் இதுபற்றி விரேந்தர் சேவாக் கூறியதாவது மேக்ஸ்வெல் ஐபிஎல் என்றால் ஒருவிதமாகவும் சொந்த அணி என்றால் இன்னொரு விதமாகவும் செயல்படுவதாக அவர் மீது குற்றம் சாட்டினார்.

இதற்கு முன்னர் 10 கோடி ரூபாய்க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சியர் லீடர் என்று விரேந்தர் சேவாக் மேக்ஸ்வேலை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது இந்த விமர்சனத்துக்கு பலர் ஆதரவும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *