நான்காவது போட்டிக்கான அணியில் எந்த மாற்றமும் வேண்டாம்; சேவாக் வேண்டுகோள் !! 1
நான்காவது போட்டிக்கான அணியில் எந்த மாற்றமும் வேண்டாம்; சேவாக் வேண்டுகோள்

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடிய அதே அணியுடன் நான்காவது போட்டியிலும் இந்திய அணி ஆட வேண்டும் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

விராட் கோலியின் கேப்டன்சியின் கீழ் இந்திய அணி 38 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 22 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த 38 போட்டிகளில் ஒருமுறை கூட அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் ஒரே அணி ஆடியதில்லை. 38 போட்டிகளுக்கு அணி வீரர்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

நான்காவது போட்டிக்கான அணியில் எந்த மாற்றமும் வேண்டாம்; சேவாக் வேண்டுகோள் !! 2

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தவான் நீக்கப்பட்டது, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டது ஆகிய மாற்றங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. முதல் இரண்டு போட்டிகளில் அடைந்த தோல்விக்கு பிறகு, அதிரடி மாற்றங்களுடன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தி அபார வெற்றி பெற்றது.

நான்காவது போட்டிக்கான அணியில் எந்த மாற்றமும் வேண்டாம்; சேவாக் வேண்டுகோள் !! 3
NOTTINGHAM, ENGLAND – AUGUST 22 : Virat Kohli of India leaves the field after India won the 3rd Specsavers Test Match between England and India at Trent Bridge on August 22, 2018 in Nottingham England. (Photo by Philip Brown/Getty Images)

இந்நிலையில், மூன்றாவது போட்டியில் ஆடிய அதே அணி நான்காவது போட்டியிலும் ஆட வேண்டும் என்று சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள சேவாக், நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் செய்யக்கூடாது என்பது எனது கருத்து. ஆனால் கோலி மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. மூன்றாவது போட்டியில் ஆடிய இந்திய அணி வலுவான மற்றும் சமநிலையுடன் உள்ளது. தொடக்க வீரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுகின்றனர். அதேபோல, பவுலிங்கும் சிறப்பாக உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டிருக்கிறோம். அஷ்வினும் நல்ல ஃபார்மில் உள்ளார். எனவே அதே அணியுடன் நான்காவது போட்டியில் ஆடலாம் என சேவாக் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *